பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரைக் கும்பிடு திTயுமானவர் சிறந்த அநுபவ ஞானி; அவருடைய திருவாக்கில் உபநிஷத்துக்களில் கூறப்பெறும் உயர்ந்த உண்மைகள் மிக எளிய முறையில் தெளிவாக அமைந்திருக் கின்றன. மிகவும் நுட்பமான கருத்துக்களே அழகாகச் சொல்லுகிருர். வேதாந்த சித்தாந்த சமரச கன்னிலையையே அவர் விரும்புகிறவர். பார்க்குமிடம் எங்கும் ஒரு நீக்கமற நிறைகின்ற பரிபூ. ரனப் பொருளின் தன்மையை உணர்ந்தவர் தாயுமானவர். விரும்பும் சரியை முதல் ஞானம் வரையில் உள்ள சோபா. னங்கள் அரும்பு, மலர், காய், கனிபோல் அமைந்தவை என்பது அவர் கருத்து. ஆதலின் அங்கைகொடு மலர் துர்வி அங்கமது புளகிப்ப அன்பினால் உருகிச் செய்யும் வழி பாட்டையும் அவர் விரும்புகிரு.ர். ஒரு நாள் இறைவனே ஓர் உருவத்திலே வைத்து மலரால் அருச்சித்து வழிபட்ப் புகுந்தார். இறைவனுடைய திருவுரு. வத்தை எழுந்தருளப் பண்ணினர். பூசைக்குரிய பண்டங் களேத் தொகுக்கத் தொடங்கினர். கந்தவனத்துக்குச் சென்று மலர் கொய்யலாம் என்று எண்ணிப் போனர். ஒரு கந்தியாவட்டைச் செடிமுன்பு கின்ருர். அதில் சுத்த, சத்துவகுணத்தின் உருவம் போல வெள்ளே வெளேரென்ற மலர் மலர்ந்திருந்தது. அடுக்கடுக்காக இதழ்கள் இருந்தன. அந்த மலரைத் தாயுமானவர் கண்டார். - மு. த லி ல் மலராகத்தான் கண்டார். பின்பு, அதனூடே அவருடைய கண்கள் சென்றன. அவருடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆலைக்_கரும்பு.pdf/33&oldid=744396" இலிருந்து மீள்விக்கப்பட்டது