பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 ஆலேக் கரும்பு மனநிலை இப்போது வேறுபட்டது. பூவைப் பறிக்கப் புறப்பட்டபோது அவர் மனம் இருந்த கிலே வேறு. இப்போது அது உயர உயரப் பறந்து இறைவனுடைய அகண்டமான உருவத்தில் ல யி க் கு ம் கிலேக்குச் சென்று கொண்டிருந்தது. மலரை ஒரு செடியில் இருக்கும் அழகிய பொருளாகக் கண்டவர். இப்போது ஆண்டவன் உறையும் இடமாகக் கண்டார். மலேயிலும், மணலிலும், வானிலும், மண்ணிலும், கடலிலும், பனித்துளியிலும், சூரியனிலும், தீப்பொறியிலும், குகையிலும், வெளியிலும், மனிதன் உள்ளத்திலும், உலக முழுவதும் நிறைந்தி ருக்கும் இறைவன் அந்த அழகிய நந்தியாவட்ட மலரிலே காட்சி கொடுத்தான். மலர் தன் வெள்ளிதழ்களை விரித்து இவரைப் பார்த்துச் சிரித்தது. * 'இந்த மலர் வேறு நீ பூசை செய்யப் புகும் பொருள் வேறு என்ரு நினைக்கிருய்?நீ பரம்பொருளின் வடிவம் என்று அழைத்துப் பாவிக்கின்ற பிம்பத்தில் எழுந்தருளி யிருப்ப வனே என்னிடத்திலும் இருக்கிருனே! இது உனக்குத் தெரியவில்லையா? மனிதன் பீடமிட்டு அலங்கரித்துத் திருவுருவத்தை வைத்துப் போற்றுகிருன் அடுக்கடுக்கான இதழ்களும், தாய வெண்மை நிறமும், நறுமணமும், மென் மையும், தண்மையும், மலர்ச்சியும் உள்ள என்னப் படைத்தவன் இறைவன். அவனுடைய வண்ணத் திருக் கையால் அழகுபெற்ற என்னிடம் அவன் மகிழ்ந்து உறை கிருனே. அதை நீ காணவில்லையா? என்னிடத்தில் உள்ள அழகான அடுக்கு என்ன என்று நினைக்கிருய்? அவனு டைய அருளடுக்கு அல்லவர் என்பால் உள்ள மணமாக அவன் இருக்கிருன் மென்மையாக இருக்கிருன் தண்மை யாக இருக்கிருன் வெண்மையாக இருக்கிருன் என்னைப் பறித்துப் பூசை செய்வதைவிட, எனக்குள் இறைவன் உறைவதை, கானகவே எழுந்தருளியிருப்பதைக் காண, 'உனக்குக் கண் இல்ல்ையா?" * . . . . . . . . . . - - - --

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆலைக்_கரும்பு.pdf/34&oldid=744397" இலிருந்து மீள்விக்கப்பட்டது