பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரைக் கும்பிடு 29. அந்த மலர் பேசியதா?அல்லது தாயுமானப் ப்ெருந்தகை யாருடைய அறிவுதான் பேசியதா?-தெரியவில்லை. எப்ப டியோ மலர் கொய்ய வந்தவர் அந்த மலரிலே இறைவனேக் கண்டு கின்றுவிட்டார். அவருடைய உள்ளமான வண்டு. 'பண்ணேன் உனக்குஆன ಟ್ರಣ: গ্রুতে வடிவிலே - பாவித்து இறைஞ்ச ஆங்கே . பார்க்கின்ற மலரூடு நீயே இருத்தி; அப் பனிமலர் எடுக்க மனமும் நண்ணேன்" என்று ரீங்காரம் செய்தது. பார்க்கின்ற மலருடு இறைவன் இருப்பதைக் கண்டு இன்பத் தேனே மொண்டு மொண்டு உண்டது. . - - 女 ஒரு வடிவிலே பாவித்து இறைஞ்சும் பூசை கின்று விட்டது. மலருடு அவனேக் கண்டார். உடனே இறைஞ்ச வேண்டுமென்ற எண்ணம் வந்தது. மலரூடு கின்ற மகா தேவனுக்கு அஞ்சலி செய்ய வேண்டுமென்று எண்ணினர்; கைகளைக் குவித்துக் கும்பிட் கினேத்தார். ஆனல் கைகள் எழவில்லே. முன்னே பூவைச் செடியிலிருந்து பறிக்காமல் நிற்கப் பண்ணியதற்குக் காரணமாக எந்த உணர்வு தலைப் பட்டதோ, அந்த உண்ர்வே பின்னும் முறுகி எழுந்து இப் போது கைகளைக் குவிப்பதையும் தடை செய்தது. "இரண்டு கைகளையும் குவித்து இதோ மலர்ந்து விளங்கும் மலருடே தோற்றும் இறைவனுக்குக் கும்பிடு. போடலாமே!" என்று தான் முதலில் ஓர் எண்ணம் எழுக் தது. ஆளுல் கை எழவில்ல்ே உள்ளத்தில் வேறு ஒரு கினேவு தோன்றியது. இறைவன் எதிரே இருந்த மலரில் மாத்திரமா இருக் கிருன்? திருவுருவாக அமைத்த பிம்பத்தில் இருக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆலைக்_கரும்பு.pdf/35&oldid=744398" இலிருந்து மீள்விக்கப்பட்டது