பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 ஆலேக் கரும்பு இறைவன்ே மலரிலும் இருக்கிருன் என்று உணர்ந்த உணர்விலே அடுத்தபடி, இருதய மலரிலும் ஈசன் இருக் கிருன் என்ற உண்மை தட்டுப்பட்டது. முன்னே உள்ள மலரிலும் அவன் மலர்கிருன் மலரைக் கண்டு நிற்கும் மனி தனது உள்ள மலரிலும் அவன் சிற்கிருன். மலரிலே இருக்கும் பெருமானேக் கும்பிடக் கையெடுக்கிருேம். இரண்டு கைகளையும் குவிக்கும்போது அந்தக் கும்பிடு முன்னே கிற்கும் இறைவனுக்கு ஆகும். ஆனல் குவித்த கைகளுக்குப் பின்னும் இறைவன் கிற்கிருனே! முன்னே மலரில் மணமாயும் பின்னே இருதயத்தில் துடிப்பாகவும் நிற்கிருன் இறைவன். இரண்டு பக்கத்திலும் கூருள்ள ஈட்டியைப்போல, கும்பிடும்போது முன்னும் பின்னும் உள்ள இரண்டு உருவங்களுக்கும் அந்தக் கும்பிடு அமை வதானுல் புறத்தே மலரில் தோன்றும் இறைவனுக்கும் அகத்தே இருதய புண்டரிகத்தில் நிற்கும் பரமனுக்கும் ஒருங்கே வணக்கம் செய்ததாக அமையும். நம்முடைய கைகள் அப்படி அமையவில்லேயே ஐந்து விரல்களும் வெவ்வேறு அமைப்போடு உள்ள கையால் கும்பிடும்போது கண்டுவிரல் முன்னே விற்கும்படி குவித்து வணங்குகிருேம். ஆகவே ஒரு பக்கத்தான் கும்பிடு தெரியும் கட்டைவிரல் நிற்கும் மற்ருெரு பக்கம் கும்பிடும் செயலைக் காட்டவில்லே. முன்னும் பின்னும் உள்ள ஈசனே ஒரேசமயத்தில் கும். பிட்டால் அது முழுக் குழ்பிடு ஆகும். முன் உள்ளதனை மாத்திரம் கும்பிட்டுப் பின்னுள்ள இருதயகமலவாகனக் கும்பிடாமல் விட்டுவிட்டால் அது பாதிக் கும்பிடுதானே? முழுக் கும்பிடு போட நம்முடைய கையின் அமைப்பு. இடங் கொடுக்கவில்லை. ஆதலின் மலருடு இருக்கும் பெருமானேக் கும்பிட்டால் அது அரைக்கும்பிடு ஆகிறது. தாயுமானவர் சிந்தனையில் இந்த நினைவோட்டம் ஓடியது. ம்லருடு இருப்பதைக் கண்டேன். உடனே கைகுவிக்க எண்ணினேன். கைகுவிக்க மனம் காணியது.