பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 ஆல்க் கரும்: தாயுமானவர் உள்ளம் இறைவனுடைய திருவுருவ வகைகளே அளந்தது. ஒரு வடிவிலே பாவித்து இறைஞ் சுவதிலே தொடங்கி மலருடும், மனத்துாடும். விண்ணிலும், பூதத்திலும், வேதத்திலும், நாதத்திலும், வேதாந்தத்திலும், போதத்திலும், ஞானத்திலும், ஞானனந்தத்திலும் அவன் கிற்பதை அவர் எண்ணி எண்ணிப் பார்த்தார். - விண்ணே, விண் ஆதியாம் பூதமே, நாதமே, வேதமே வேதாந்தமே, மேதக்க கேள்வியே, கேள்வியாம் பூமிக்குள் வித்தே, அவ் வித்தின் முளேயே!” . . . 大 இப்படியெல்லாம் இருப்பதோடன்றி, கானும் கண் ளுகவும், கருதும் கருத்தாகவும், கருத்தைப் புலப்படுத்தும் எண்ணுகவும் எழுத்தாகவும் நிற்பவனும் இறைவன்தானே? கல்ல கதிக்குச் செல்வாருக்குத் தன் கரத்தால் வழிகாட்டும் மோனப் பெருமாளுகிய தட்சினமூர்த்தியும் அவன்தான். மனத்தால் கினைப்பதற்கரிய சிதாகாசத்தின் அடையாள மாகிய சிற்சபையில் ஆனந்தத் தாண்டவமிடும் நடராசப் பெருமானும் அவன்தான். ஒரு கிலேயில் மெளனமாக இருந்து சின் முத்திரையில்ை உபதேசம் செய்யும் இறைவன், ஒரு கிலேயில் ஆனந்தத் தாண்டவம் புரிந்து அருளைப் பில்க விடுகிருன் தட்சினமூர்த்தி, கட்ராஜ மூர்த்தி என்ற இரண்டு திருக்கோலங்களும் ஒரே சக்தியின் இருவேறு உருவங்கள் ஒன்று அமைந்த சக்தி (Static Force): un iPG|Gray Gustigh fäst (Dynamic Forge). இரண்டு மூர்த்திகளும் தென் திசையை நோக்கி எழுந்தருளியிருக்கின்றனர். தென் திசையை நோக்கிக் செல்லும் ஆன்மாக்களே உய்விக்கும் பொருட்டு அந்தத் திசையிலே தம் விழிகளே வைத்து அருள்புரிகின்றனர். சாம்ாறே வாழ்கின்ற மக்களுக்கு ஆமாறு அருள் செய்யும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆலைக்_கரும்பு.pdf/38&oldid=744401" இலிருந்து மீள்விக்கப்பட்டது