பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/42

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 . ஆலேக் கரும்பு இடத்துக்கா நாம் வந்து சேர்ந்தோம்" என்ற சிந்தனே ஏழைக்கு உண்டாயிற்று. 'நான் ஒருவன்; இவர்கள் ஐந்து பேர். அவர்களுக்கு நடுவிலே எப்படிச் சுதந்தர மாக வாழ முடியும்? என்ற கவலே வேறு தோன்றியது. ஆலுைம் தன்னுடைய பலத்தினலே அந்த ஐந்து பேரை யும் அடக்கலாம் என்று பார்த்தான் முடியவில்லே. இறைவனுக்கு நல்ல மலர்களைப் பறித்துக்கொண்டு வந்து பூஜை செய்யலாம் என்று எண்ணியிருப்பான் ஏழை. அந்த ஐவரில் ஒருவன் அத்தனே பூவையும் யாரோ ஒரு பெண்ணின் கொண்டையிலே செருகிவிட்டு வருவான். இறைவனுடைய விக்கிரகங்களே வைத்து அலங்கரித்துப் பார்க்க வேண்டுமென்று இடம் பண்ணுவான். அந்த இடத்திலே மண்ணையும் பொன்னேயும் பெண்ணேயும் கொண்டு வந்து நிறுத்துவான் ஒரு திருடன். இப்படியே நல்ல காரியம் எது செய்ய முயன்ருலும் அந்த ஐந்து பேர்களும் ஏதாவது தடை செய்தார்கள். அவர்களே அடக்கலாம் என்று பார்த்தான் முடியவில்லை. அவர்கள் மிகவும் பலமுடையவர்களாக இருந்தார்கள். சரி, சரி. இது நம்மால் முடியாத காரியம் வீட்டை நமக்குக் கொடுத்த செல்வரிடமே சொல்லி இந்த ஐந்து பேருடைய கொட்டத்தையும் அடக்கவேண்டும்" என்று எண்ணினன் ஏழை சுவாமி, எனக்கு நீங்கள் அளித்த வீட்டிலே விளக்கை ஏற்றி வேண்டுமட்டும் உயரத்துாண்டி, வாழும் உபாயம் என்னவென்று அறிந்து, மேலும் மேலும் உயர் வாக வாழலாம் என்று எண்ணினேன். அப்படி கான் எழந்தபடி அந்த வீட்டுக்குள், என் முயற்சிகளுக்கெல்லாம் தடையாக ஐந்து பேரை வைத்திருக்கிறீரே! அவர்களே, என்னுல் அடக்க முடியவில்லை. அவர்கள் சாலவும் வலிய வந்துள்ஆஇருக்கிருர்கள், நான் இனி என்ன செய்யட்டும்?