பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்து திருடர் 37 ஒன்றும் தெரியவில்லையே' என்று முறையிட்டுக் கொண்டான். - செல்வர் திருப்புகலூரில் எழுந்தருளியிருக்கும் சிவ பெருமான். ஏழை திருநாவுக்கரசு நாயனர் அவர் பெற்ற வீடு உடம்பு. அதில் ஏற்றின விளக்கு அறிவு. அதனுள் சால வலியராக இருக்கும் ஐவர் ஐம்பொறிகள். மெய்யுளே விளக்கை ஏற்றி வேண்டளவு உயரத் துாண்டி உய்வதோர் உபாயம் பற்றி உகக்கின்றேன்; உகவா வண்ணம் ஐவரை அகத்தே வைத்தீர்! அவர்களே வலியர் சாலச் செய்வதொன்று அறிய மாட்டேன்; திருப்புக லுர னிரேl (மெய் - உடம்பு. விளக்கு என்றது அறிவை. உகக் கின்றேன் . உயர்கின்றேன். உகப்பு - உயர்வு. ஐவர் - ஐம்பொறி கள். சால - மிகவும். திருப்புகலூர்னர் என்பதன் விளி கிருப்புக அாானிரே என்பது.) - இந்த ஐந்து பேரும் பண்ணுகிற அமர்க்களத்தை அருணகிரி நாதரும் சொல்கிருர், - - ஒரஒட்டார், ஒன்றை உன்னஒட்டார்மலர் இட்டுனதாள் சேரஒட் டார்ஐவர் செய்வதென் யான்? சென்று தேவர்உய்யச் - சோர நிட் டுரனைச் சூரனைக் காருடற் சோரிகக்கக் கூரகட்டாரிஇட் டோர்இமைப்போதினிற் கொன்றவனே" என்பது கந்தர் அலங்காரம். - - - . சோரனும் கொடுமை புரிபவனுமாகிய சூரனைச் சங்காரம் செய்த பெருமான் நீ அல்லவா? நீ இந்தச் சோரர்கள் ஐவரையும் அடக்கக் கூடாதா?’ என்று அவர் விண்ணப்பித்துக் கொள்கிரு.ர்.