பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/45

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரான் என்று அறிந்தேன் 39 கடைசியில் அந்தத் தர்மப் பிரபு தம்முடைய காட்சியை நல்கினர். தம் கைங்கிறையச் சோற்றை அள்ளிக்கொண்டு வந்து போட்டார். - 'யோ?” என்று அவர் கேட்டுக்கொண்டே போட்டார். 'நீங்களா" என்று அவனும் வியப்பில் ஆழ்ந்தான். அவரை அவன் பார்த்திருக்கிருன். எத்தனையோ இடங்களில் எத்தனையோ கோலத்தில் பார்த்திருக்கிருன். பல சமயங்களில் அவரிடம் காசும், துணியும் பெற்றிருக் கிருன் ஆலுைம் அவரே பிச்சைக்காரக் கூட்டத்தைக் காப்பாற்றும் உபகாரி என்று அவன் தெரிந்துகொள்ள வில்லை. அவர் வீட்டில் அவர் அந்தப் பிச்சைக்காரனேத் தெரிந்துகொண்டு, 'யோ?” என்று கேட்டபோதுதான் அவனுக்கு உண்மை விளங்கியது. - 大 இறைவனகிய வள்ளலைக் காணவேண்டும் என்று தேடுகிறவர்கள் பல பேர். அவனுடைய திருவருளால் தனு கரண புவன போகங்கள் கிடைக்கின்றன என்று தெரிந்தாலும் அவனே நம் உயிருக்குத் துணையாக நிற்பவன் என்று அதுபவத்தில் உணரமுடிகிறதில்க்ல. நூல்களிலே கண்டவற்ருல் இறைவனைப்பற்றிய செய்திகளேத் தெரிந்து கொண்டவர்களே பலர். அவனே உள்ள வண்ணம் உணரும் கிலே வந்தால் அப்போது இருக்கும் அமைதியே வேறு. குருடனுக்குக் கண் கிடைத்தது போன்ற கிலே அது; வறியவனுக்குப் புதையல் கிடைத்தது போன்றது. அது அந்த நிலை எப்படி வரும் நம்முடைய முயற்சியில்ை வரும் என்று சொல்லமுடியாது. முயற்சி வேண்டியதுதான். ஆனல் அது எப்போது பயன் தரும் என்று உறுதியாகக் கூறமுடியாது. இறைவனுடைய திருவுள்ளம் இரங்கி, இவனுக்கு அருள் செய்யவேண்டும் என்று அவன் ஆட்