பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 ஆலேக் கரும்பு கொள்ளப் புகுந்தாலன்றி அவனை உணர்வதென்பது இயலாத காரியம். நாம் எத்தனை நினைத்தாலும் அவன் அருள் கிடைப்பது அரிது. அவன் நம்மை கினேத்தால்தான் நமக்கு அவனே உள்ளபடி கினேக்க இயலும். "நான் பக்தி பண்ணினேன். அதல்ை இறைவன் அருள் கிடைத்தது" என்று சொல்வது செருக்கின் விளைவு. 'கான் ஒரு ரூபாய் கொடுத்தேன்; செட்டியார் ஒரு படி அரிசி தந்தார்" என்று சொல்வது போன்றது. அது கம் "முடைய முயற்சியால் இறைவன் அருள் கிடைத்தது என்ருல் நம் முயற்சிக்குத்தான் பெருமையேயன்றி அவன் அருளுக்குப் பெருமை இல்லை. உண்மை அது அன்று. அவன் அருள் இல்லாவிட்டால் நாம் அன்பு செய்யவே முடியாது. அவன் ஆட்டுவித்தால் நாம் ஆடுவோம். அவன் தன்னை கினைக்கச்செய்தால் காம் கினப்போம். . ... - நம்மை அவன் அடையாளம் கண்டுகொண்டு, 'நீ என் அடியான்' என்று கூ நில்ை நாமும் அவனே அடையாளம் கண்டு கொண்டு, நீ என் தெய்வம்" என்று உணர முடி யும். வெறும் சொல்லளவில் அல்ல; உயிரோடு ஒன்றிய அநுபவத்தில் உணரலாம். . 'அவன் அடியான் என்று என்னே உணராமல், ஏதும் சட்டை பண்ணுமல் இத்தனே காலமும் இருந்தான். நானும் அவனைச் சிறிதும் அறியாமல் இருந்தேன். யார் யாரையோ பிரான் என்று கினேந்து வாழ்ந்தும், இறந்தும், பிறந்தும் சுற்றினேன். எம்பெருமான் என்னேத் தன் அடியான் என்று உணர்ந்து தன் பார்வையை என்மேல் பரப்பின்ை. அப்பொழுதுதான் நானும் அவனே உணர்ந்து கொண்டேன். எனக்கு எல்லாமாகி நிற்கும் தலைவன் என்று அறிந்துகொண்டேன்" என்று பாடுகின்ருர் அப்பர். சுவாமிகள். -- - - * , , , . • . . . x

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆலைக்_கரும்பு.pdf/46&oldid=744410" இலிருந்து மீள்விக்கப்பட்டது