பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/49

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பக்தருக்கு வாய்த்த பயன் 43. 'இது என்ன ஊர்?" 'ஆலந்துTர்." 'இது என்ன ரோடு?' 'மெளண்ட் ரோடு." 'சென்னேக்கு இது போகுமோ?! “ஆகா, போகும்.” பிரயாணி மேலும் நடக்கிருPன். சைதாப்பேட்டையை அடைகிருன். அப்போதும் அவன் விசாரிக்கிருன். 'இது என்ன ரோடு ?" 'மெளண்ட் ரோடு.” 'இன்னும் சென்னை எவ்வளவு தூரம் இருக்கிறது?" 'மூன்று நான்கு மைல் இருக்கும்.” - மறுபடியும் அவன் நடந்து செல்கிருன் ஹிந்து' காளியாலயத்துக்கு கேரே வந்துவிட்டான். அப்போது விசாரிக்கிருன். 'இது என்ன ரோடு?” 'மெளண்ட் ரோடு.” 'இது என்ன ஊர்?" டுசன்னே.' 'சென்னை யா!' “ஆம்!” அவனுக்கு ஆச்சரியமாயிருக்கிற்து. அவன் மெளண் ரோடிலேதான் கடந்துகொண்டிருக்கிருன். ஆனல் முன் பெல்லாம் மெளண்ட் ரோடு வேறு, சென்னே வேறு என்று எண்ணும்படி ஒரு நிலையில் நடந்துகொண்டிருந்தான். இப்போதோ அதுவே மெளண்ட் ரோடு, அதுவே சென்னே என்ற நிலை வந்துவிட்டது. இப்போதும் மெளண்ட் ரோடில் நடக்கிருன் ஆளுல் சென்னைக்குப் புறம்பே கடக்கவில்லை; சென்னைக்குள்ளேயே நடக்கிருன்.