பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன் னு ைர தமிழ் இலக்கியத்தில் கடவுள் உணர்ச்சியை எடுத்து விட்டால் அது உயிரற்ற உடல் போலத்தான் இருக்கும். சங்க காலத்து நூல்களில் கடவுளேப்பற்றிய பாடல்கள் அளவிலே குறைந்து காணப்படலாம். ஆனால் கடவுள் உணர்ச்சி அக் காலத்துத் தமிழர்களிடம் குறைந்திருந்தது என்று சொல்லமுடியாது. சங்ககாலத்து இலக்கியங்கள் என்று பெயரிட்டு வழங்கும் நூல்கள் பதினெட்டே பத்துப் பாட்டு, எட்டுத் தொகை என்பன. பதினெண் கீழ்க்கணக்கு வரிசையும் சேர்த்தால் முப்பத்தாறு ஆகும். பல நூற் றாண்டுகளாக விளங்கியது சங்கம். அவ்வளவு காலத்தில் இந்த முப்பத்தாறு நூல்களே எழுந்தன என்று சொல்ல. லாமா? இப்போது கிடைப்பவை இவ்வளவுதான். இன்னும் எத்தனையோ நூல்கள், பலவகையான பனுவல்கள் நிச்சயமாக உண்டாகியிருக்கத்தான் வேண்டும். ஆதலின் இப்போது கிடைக்கும் சங்க நூல்களைக் கொண்டு கடவுளைப் பற்றிய இலக்கியங்கள் மிகுதியாக இல்லையென்ற சொல்ல ஒண்ணாது. - . . . . . இப்போது கிடைக்கும் நால்களில் ஒவ்வொன்றிலும் கடவுள் வாழ்த்து இருக்கிறது; திருக்கோயில், விழா, வழிபாடு ஆகியவற்றைப் பற்றிய செய்திகள் இடையிடையே வருகின்றன. அவை பழங்காலத் தமிழரின் கடவுளுணர்ச்சி யைக் காட்டும் அடையாளங்கள். சங்க காலத்துக்குப் பின்னர் இன்றுவரை தோன்றி புள்ள இலக்கியங்களைத் தொகுத்துப் பார்த்தால் எல்லாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆலைக்_கரும்பு.pdf/5&oldid=957197" இலிருந்து மீள்விக்கப்பட்டது