பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருட்கண் 53 ணத்தையும் பார்த்தான். தன் எசமானருக்கு உபயோக மாகும் நாற்காலி, மேஜை போன்ற கருவிகளாகச் செய்ய லாமே என எண்ணினன். அவன் தொழிலாளி. அவன் எண்ணியதை நியாயம் என்று சொல்பவர்கள் இருக்கி giggir, Luis Lóth loštilj (utility value) அதற்கு இருக்கிறது என்று அவன் தெரிந்துகொண்டிருக்கிருன். நாற்காலி தனியாக இருந்தால் என்ன பயன்? அதன் மேல் உட்காருவதற்கு ஒரு மனிதன் இருந்தால்தான் அதன் பயன் புலப்படும். அது கருவி. கருவிக்குத் தனியான சிறப்பு இல்லே. பயன்படுத்துபவர் இல்லாவிட்டால் அதற்கு வேலே இல்லே. r அதே மரத்தில் இறைவனுடைய திருவிளையாடல் களேச் சிற்பியை விட்டுச் செதுக்கச் செய்தால் அது கலைப் பொருளாகிறது. கலே தனியாகவே நின்று இன்பம் பயக்க வல்லது. கருத்தில் உள்ள கவலையைப் போக்கவல்லது. பல ஆண்டுகளானுலும் கலேப் பொருளேக் காண்பவர் பரவசம் அடைவார்கள். சிற்பியின் கண்ணும் கலே மயமான அவன் கருத்தும் இணைந்த பார்வை கலேப் பார்வை. வெறும் கண்ணுல் பார்த்திருந்தால் விறகாக அவனும் எண்ணி யிருக்கலாம். வண்ணத்தையும் திண்ணத்தையும் பார்க்கும் அளவில் நின்றிருந்தால் கருவிப் பொருளாகிய நாற்காலி முதலியவற்றைச் செய்ய உதவும் என்று எண்ணியிருக்க லாம். பண்பட்ட உள்ளத்தோடு, கலைஞானம் நிறைந்த கருத்தோடு பார்த்தவன் ஆகையால் அவனுடைய கற்பனை கலேப் பொருளாக்குமாறு துாண்டியது. இறைவனுடைய நினவும் இருப்பதல்ை திருவிளையாடற் சிற்பத்தைச் செதுக்கலாம் என்று எண்ணினன். அவன் எண்ணத்தில் ஏற்றம் இருக்கிறது. அவன் பார்வையில் பண்பு இருக் கிறது. அவன் கண் நல்ல கண்; அருட் கண். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆலைக்_கரும்பு.pdf/59&oldid=744424" இலிருந்து மீள்விக்கப்பட்டது