பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/60

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 ஆலேக் கரு ւեւ, அருட் கண்ணேப் பெற்றிருந்தம்ையால்தான், நாரை யையும் கொக்கையும் செய்யலாம் என்று எண்ணுமல் இறைவன் திருவுருவங்களே அமைக்கலாம் என்று எண். ணினன். அருட்கண் இல்லாமல் கொள்ளிக் கண்ணுக இருந் தால் அவன் கற்பனையில் அது எரிந்து சாம்பராகியிருக்குமே. அந்த மரம் சாமானிய மரம் அன்று. எங்கும் கிடைப் பது அன்று. மர வகையில் அருமையாகக் கிடைக்கும் வகை என்பது மட்டும் அல்ல கருங்காலி மரம் அரியது தான். ஆல்ை, அது சேகு ஏறிய மரம் நல்ல பண்டம். அரும்பொருள். ஆனல் அதன் அருமை முழுதும் காணும் தன்மை சிற்பியின் கண்ணுக்குத் தான் இருந்தது. அவன் அருட்கண்ணுல் நோக்கினன் அரும் பொருள் தோன்றியது; அரும்பொருளின் அருமை தெரிந்தது; அரும்பொருள் வெறும் பொருளாக, விறகுக் கட்டையாகத் தோன்ருமல் அரும்பொருளாகவே தோன்றி யது. அது இல்லாததல்ை மற்றவர்களுக்கு அப்படித் தோன்றவில்லை. ...: - திருமூலர் இந்த அருட்கண்ணேப் பற்றிப் பாடுகிருர்: அருட்கண் இலாதார்க்கு அரும்பொருள் தோன்கு; அருட்கண் உளோர்க்கு எதிர்தோன்றும் அரனே. அருட் கண் இல்லாதவர்கள் புறக் கண்ணுலே மாத் திரம் ஒன்றைப் பார்த்தால் அதைத் தமக்குப் பயன் படுத்திக்கொள்ளவேண்டும் என்றே கினைப்பார்கள். புறக் கடையிலே புடலங்காய் காய்த்துத் தொங்குகிறது. அதை அருட் கண் இல்லாத ஒருவன் பார்த்தால் அதன் எழிலையும் மென்மையையும் பார்த்துக்கொண்டேயா இருப்பான் அதை உடனே பறித்துச் சமைத்து உண்பான் இல்லா விட்டால் சந்தைக்கு அனுப்பிப் பணமாக மாற்றிவிடுவான் ஆனல் இறைவன் அருளே கினேக்கிறவன், அவனது