பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருட்கண் 55. அருளேயே நம்பி வாழ்கிறவன் ஒருவன் அதைக் காண்கிருன். அவன் அதில் இறைவனேக் காண்பான். அதன் வண்ணத் தையும் எழிலேயும் கண்டு. இறைவனுடைய படைப்பின் அழகிலே ஈடுபட்டு இன்புறுவான். அதைப் பறித்தாலும் மாகேசுவர பூசைக்கு உபயோகப்படுத்துவான். கருத்திலே அருள் நினைவு இருப்பதால் அவன் கண்ணில் அருள் கொழிக்கிறது. வரகுண பாண்டியன் என்ற மன்னன் ஒருவன் இருங் தான். அவன் பாண்டிய காட்டையும் சோழ நாட்டையும் சேர்த்து ஆண்டு வந்தான். ஆற்றல் மிக்க அவன் பாண்டிய காட்டு மன்னகை மதுரையில் தங்கிச் சோழ நாட்டையும் தன் ஆணையின் கீழ் வைத்து ஆண்டிருக்கலாம். அல்லது சோழ நாட்டுத் தலைநகரான உறையூரிலே தங்கித் தன் அரசாட்சியை கடத்தியிருக்கலாம். அவனே சோழநாட்டில் உள்ள திருவிடைமருதூரில் வந்து இருந்து ஆட்சிபுரிங் தான். மதுரைக்கும் போய்வருவதுண்டு. ஆலுைம் பெரும்பாலும் திருவிடைமருதூரிலே இருந்து வந்தான். காரணம் என்ன தெரியுமா? அவன் குழந்தைப் பருவத்தி லிருந்தே சிவலிங்க வழிபாட்டில் ஊன்றிய பற்றுக்கொண் டிருந்தான். எந்த ஊரிலே பெரிய சிவலிங்கம் இருக் கிறதோ அங்கே தங்கவேண்டும் என்று கினைத்தான். தஞ்சைப் பிருகதீசர் கோயில் இல்லாத காலம் அது. திரு விடைமருதுரரில்தான் மகாலிங்கம் எழுந்தருளி யிருக் கிருர், ஆகையால் அங்கே வந்து அரசாட்சி புரிந்ததோடு தினந்தோறும் சிவலிங்கப் பெருமானேயும் தரிசித்துவந்தான் அருட் கண்ணேப் பெற்றிருந்த அந்தமன்னன் ஒருநாள் ஆலயத்துக்குச் சென்றுகொண்டிருந்தபோது வழியில் ஒரு வேப்ப மரத்தைக் கண்டான். அதில் நிறையப் பழங்கள் பழுத்திருந்தன. அப்படியே கின்றுவிட்டான். அந்தப் பழத்தில் அவன் உள்ளம் ஈடுபட்டது. அவற்றைத் தின்ன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆலைக்_கரும்பு.pdf/61&oldid=744427" இலிருந்து மீள்விக்கப்பட்டது