பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 56 ஆலேக் கரும்பு - வேண்டும் என்ற எண்ணத்தால் அல்ல. அது காகத்தின் வேலே அல்லவா? அவனுக்கு அவை வேப்பங்கனிகளாகவே தோன்றவில்லை. எல்லாக் கனிகளும் சிவலிங்கப் பெரு மாளுகக் காட்சி அளித்தன. உடனே அந்த மரத்துக்கு மேல் விதானம் அமைக்கச் செய்தான். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பழகியில் பேகன்' என்ற மன்னன் ஆண்டு வந்தான். பழகிக்கு ஆவினன் குடி என்று ஒரு பெயர் உண்டு. அவன் முரு கனிடம் தளர்வில்லாத அன்புடையவன். ஆவினன் குடியில் எழுந்தருளியிருக்கும் முருகவேளே காள்தோறும் தரிசனம் செய்து இன்புறுகிறவன். ஒரு சமயம் அவன் நடந்து வந்துகொண்டிருக்கையில் வழியில் ஒரு மயில் ஆடிக் கொண்டிருந்தது. ஆடும்பொழுது மயில் அடிக்கடி, "சர்ர், சர்ர் என்று தோகையைச் சிலிர்த்துக்கொள்ளும் அந்தச் சிலிர்ப்பைப் பேகன் கண்டான்.அவனுக்கு மனசில் கவலை உண்டாயிற்று. 'கம்முடைய ஆண்டவன் ஏறிப் பவனி வரும் அழகிய வாகனம் அல்லவா இது? இது உடம்பைச் சிலிர்த்துக்கொள்கிறதே! இதற்குக் குளிர்கிறதோ!' என்று எண்ணித் தன்மேல் அணிந்திருந்த விலை உயர்ந்த சால்வையை எடுத்துப் போர்த்துவிட்டான். முருகனுடைய வாகனம் என்ற கினேவும் அதற்குத் துன்பம் உண்டான தாகக் கற்பனை செய்துகொண்ட கருத்தும் எல்லோருக்கும் வருமா? உலகத்தில் உள்ள பொருள்களேக் காணும் போதெல்லாம் இறைவனுடைய தொடர்பை நினைக்கும் கருத்தும், அதைேடு இணங்து பார்க்கும் அருட்கண்ணும் படைத்தவன் பேகன். இத்தகைய அருட் கண் உடை யோருக்கு எதிரே அரனே தோன்றுவான் என்று திரு மூலர் சொல்கிரு.ர். - ஒருவன் குருடகை இருந்தால் அவனுக்கு இருளுக்கும் ஒளிக்கும் வித்தியாசம் தெரியாது. சூரியன் வானில் ஒளி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆலைக்_கரும்பு.pdf/62&oldid=744428" இலிருந்து மீள்விக்கப்பட்டது