பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/65

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விட்டன. சில நுட்பமான ஒலிகளைக் கேட்கும் மென்மை நம் காதுக்கு இல்லே. வண்டு முரல்கிறது என்று பாட்டிலே கண்டால் அது பொய் என்று சொல்கிருேம். மெல்லிய மலரின் மனத்தையும் குயிலின் இனிய கீதத்தையும் வண்டின் ரீங்காரத்தையும் நம் மேலே பட்டு: நம்மையெல்லாம் தடவிக்கொண்டு செல்லும் காற்றின் மென்மையையும் உணரமுடியாதபடி நம்முடைய பொறி கள் மரத்துப் போய்விட்டன. இப்படி உடம்பில் உள்ள பொறிகளேயே மாக்க அடித்துவிட்ட நமக்கு இன்னும் நுட்பமான அருட் கண்ணேப் பற்றி யாராவது சொன்னல் எல்லாம் கட்டுக் கதை என்றே தோன்றும் ஆண்டவன் திருவுருவத்தை எங்கும் பார்க்கும் கிலே அருட்கண் உடை யாருக்கு உண்டு என்பதைக் கற்பனை செய்து பார்க்கக்கூட நம் கருத்துக்கு வலிமை இல்லே. அருட் கண்ணேப் பெற்றவ்ர்களுக்கு உலகம் முழுவதும் ஆண்டவன் உருவமாகத் தென்படும். அருட் கண் உடை யவர்களுக்கு எல்லாம் நன்ருக இருக்கும். அவர்களுக்கு. வருவன எல்லாம் நன்மைகளே என்பது அல்ல; அவர் களுக்கு வரும் தீமைகள் கூட கல்லனவாகவே தோற்றும் கல் லனவாகவே மாறிவிடும் என்றுகூடச் சொல்லலாம். குணங் . களிலே ஆண்டவனேக் கண்டு களிப்பதோடு குற்றங்களி' லும் அவன் உருவத்தையே கண்டு களிப்பார்கள். "குற்றம் குணங்கள் கூடலால வாயிலாய் என்று சம்பந்தர் பாடுகிருர், ரோஜாப் பூவைப் பார்க்கும் மர நூற் புலவன் அதன் முள்ளேயும் அதன் அங்கமாகப் பார்க்கிருன். நமக்கோ முள்ளும் மலரும் ஒன்றற்கொன்று முரளுனவை. யாகத் தோன்றுகின்றன. உள்ளத்தே அருள் ஒளி பெற்றவருக்கு எல்லாம் ஒளி மயமாக, அருள் மயமாக, ஆண்டவன் மயமாக இருக்கும்.