பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/67

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ட லிங்கம் சிவனடியார் ஒருவர் நாள்தோறும் தவருமல் சிவ பூசை செய்து வருகிருர் பூசைக்கு வேண்டிய பண்டங் களைப் பக்தியோடு சேகரித்து இலையும் மலருங் கொண்டு அருச்சித்துச் சிவபெருமானத் துதித்து வழிபடுகிருர், பரம்பரையாக அவரது வீட்டில் பூசைக்கு உரிய மூர்த்தி கள் இருக்கின்றன. அவற்றில் தலைமையாக உள்ளது. ஒரு சிறிய படிக லிங்கம் முறையாக அபிஷேகம் முதலிய வற்றைச் செய்வது அவர் வழக்கம். - இதோ பூசை நடக்கிறது. படிகலிங்கத்தை நடுவிலே வைத்திருக்கிருர். அதற்கு அபிஷேகம் செய்ய ஒரு சிறிய கிண்ணத்தில் தண்ணீர். அதை எடுத்து விடுவதற்கு ஒர் உத்தரணி. அந்தச் சிவலிங்கப் பெருமானுக்குச் சாத்து வதற்கு ஒரு சிறிய பரிவட்டம் இடுவதற்குச் சிறிதளவு சந்தனம்-இவற்றை அங்கே பார்க்கிருேம் சின்ன லிங்கத்திற்கு ஏற்றபடி எல்லாம் அளவிலே சி றியவையாக இருக்கின்றன. - திருக்கோயிலில் பூசை நடைபெறுகிறது. அங்கே எழுந்தருளியிருக்கும் சிவபெருமானுக்குக் குடங் குடமாக அபிஷேகம் செய்யவேண்டும். வீட்டில் உள்ள லிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய வைத்திருந்த நீரோ, சாத்துவதற்கு வைத்திருந்த பரிவட்டமோ இந்தப் பெருமானுக்கு போதுவ தில்லை. படிக லிங்கத்தைக் காட்டிலும் கோயிலில் உள்ள மூர்த்தி பெரியது. எல்லாக் கோயில்களிலும் கூட ஒரே அளவில் சிவபெருமான் இருப்பதில்லை. சிலதலங்களில்