பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 ஆலேக் கரும்பு பெரிய சிவலிங்கங்களைத் தரிசனம் செய்கிருேம். தஞ்சாவூர்ப் பெரிய கோயிலில் எழுந்தருளி இருக்கும் சிவலிங்க மூர்த்தி மிகப் பெரியவர். அதனுல் அவருக்குப் பிருகதிசுவரர் என்று வடமொழியிலும் ப்ெருவுடையர்ர் என்று தமிழிலும் திருகாமங்கள் வழங்குகின்றன. கடல் கடந்து சென்று தன்னுடைய வீரத்தால் அங்கங்குள்ள அரசர்களே வ்ெற்றி கொண்டு பேரரசனக விளங்கிய ராஜராஜ சோழன் அந்தக் கோயிலைக் கட்டியிருக்கிருன் கோயிலுக் கேற்ற மூர்த்தி: மூர்த்திக் கேற்ற கோயில். ". . . . அந்தப் பெரிய லிங்கத்திற்கு மற்றக் கோயில்களில் எழுந்தருளியிருக்கும் லிங்கங்களைப் போல அபிஷேகம் செய்தால் போதுமா?. சிறிய பரிவட்டம் இருந்தால் போதுமா? மற்றத் தலத்து மூர்த்திகளுக்குக் கொப் பரையில் திருமஞ்சன நீர் கிரப்பிவைத்தால், புெருவுடை யாருக்கு ஒரு குளத்தில் அல்லவா நீர் நிரப்பி வைக்க வேண்டும் அதற்காகவ்ே சிவகங்கைக் குளத்தை வெட்டி யிருக்கிருர்கள். பிருகதீசுவ்ரை விடப் பெரிய திருவுருவம் பட்ைத்து மூர்த்தியும் இருக்கிருர் கங்கை கொண்ட சோழபுரம் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி யிருக்கும் சிவலிங்கப் பெருமான் மிக மிகப்பெரியவர். தஞ்சாவூர்க் கோயிலக் கட்டின ராஜராஜன் மகளுகிய ராஜேந்திர சோழன் கங்க்ை கொண்டசோழபுரத் திருக்கோயிலக் கட்டினன். கங்தை கட்டிய கோயிலில் விளங்குபவர் பெருவுடையார் என்ருல் மக்ன்க்ட்டிய கோயிலில் இருப்பவர் பெரும் பெருவுடையார் என்று ச்ெரல்ல வேண்டும். கங்கை கொண்ட சேர்முேசு வார் என்ப்து அந்த மூர்த்தியின் திருகாமம் அந்தச் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வத்ற்காகச் சிரம் கட்டியிருக்கிருர்கள். அதன்மேல் ஏறிநின்றே அபிஷேகம் செய்யவேண்டும். ஒரு சிறிய செம்பில் தண்ணி மிொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆலைக்_கரும்பு.pdf/68&oldid=744434" இலிருந்து மீள்விக்கப்பட்டது