பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64. - ஆலேக் கரும்பு தோன்றுவதில்லை. அதில் வளைவு தோன்றுகிறது. ஒரு மலேயில் ஏறிப் பார்க்கிருேம். அப்போது வானம் பக்தலேப் போலத் தோன்றுவதில்லை. குவிந்த தோற்றத்தோடு காட்சி அளிக்கும். அதற்கு ஒரு விளிம்பு இருப்பதாகத் தோன்றுகிறது அந்த விளிம்பு தரையைத் தொட்டுக் கொண்டிருக்கிறது. அதைத் தொடுவானம் என்றும், வான விளிம்பு என்றும், வானவளேயம் என்றும் (horizon) பெயரிட்டு வழங்குகிருர்கள். கண்ணுக்குக் கடல் தெரிக் தால் வான விளிம்பும் கடலேத் தொட்டு நிற்பதுபோல, அதற்குள்ளும் போவது போலத் தோன்றும். வானம் எல்லாப் பொருளையும் கவித்து விளங்க அதற் குள்ளே நம் காட்சிக்கு அகப்பட்ட அத்தனை பொருள்களும் இருக்கின்றன. முன்பு பந்தலாகத் தோன்றிய வானமா இது? ஆம், அதுவேதான். ஆனால் இப்போது இது வெட்டின அரை எலுமிச்சம் பழம்போல இருக்கிறது; தரையின் மீது கவிழ்க்கப்பட்ட அரிக்குஞ் சட்டியைப்போல, மரக்காலப் போலக் காட்சியளிக்கிறது. . . . . . . . . . . . வானவிளிம்பு முழுவட்டம் மேலே கவிழ்ந்த உருவம் அரைவட்டம் இந்தக் காட்சியிலே மனம் ஈடுபட்டு, 'வான விளிம்பு எவ்வளவு அழகாக இருக்கிறது" என்று நாம் சொல்வோம். - - அந்த வான விளிம்பைத் திருமூலதேவரும் பார்த்தார். பல பல சிவலிங்கங்களைப் பார்த்துப் பழகிய அவருடைய கண்கள் அந்தக் காட்சியிலே கின்று இன்புற்றன.'அடடா இது வான்அல்ல. வீட்டிலும் கோயில்களிலும் பார்க்கும் இறைவனகிய சிவலிங்கப்பெருமான் அன்ருே இங்கேயும் பெரிய உருவத்தில் காட்சி அளிக்கிருன்? இந்தப் பரந்த பூமியாகிய ஆவுடையாரின் மேலே வாளுகிற லிங்கமன்ருே இருக்கிறது? வீட்டில் உள்ளது பிண்டலிங்கமாளுல் இது அண்டலிங்கம் அல்லவா?" என்று பரவசப் பட்டார். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆலைக்_கரும்பு.pdf/70&oldid=744437" இலிருந்து மீள்விக்கப்பட்டது