பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/75

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ட லிங்கம் 69 வர்கள். அண்டலிங்கத்தைக் கண்டார்கள். அதை அப் படியே காட்டில்ை நம் போன்றவர்கள் அதன் அருமை யைத் தெரிந்து கொள்ள முடியாது என்று கருதி முதலில் நமக்குப் பிண்டலிங்கத்தையே காட்டினர்கள். - இறைவன் திருவருளால் அவனேக் கண்டு இன்புற்ற பெரியவர்கள் பிறருக்கு அக்காட்சியைக் காட்ட விரும் பினர்கள். ஆனல் அவர்கள் எத்தனே காலம் சிரமப்பட்டு அந்தக் காட்சியைக் கண்டிருக்கவேண்டும் அந்தச் சிரமத்தில் ஒரளவாவது படாமல் எளிதிலே காம் கண்டு விடலாம் என்ருல் அது கடக்கிற காரியமா? அதற்கு என்று ஒரு தகுதி வேண்டும். அந்தத் தகுதி இல்லா விட்டால் பெரியவர்கள் காட்டிலுைம் நம்மால் காணமுடியாது. ஒரு பாட்டி சின்னஞ் சிறு கிண்ணத்தில் சோற்றை எடுத்து வெண்ணெயைப் போலப் பிசைந்து குழந்தைக்கு ஊட்டுகிருள். வீதியில் உள்ள மரத்தையும் மாட்டையும் வண்டியையும் காட்டிக் காட்டிச் சின்னச் சின்ன உருண் டையாக ஊட்டுகிருள். கிண்ணத்தோடே வைத்து, "இக்தா சாதம்' என்ருல் குழந்தையால் சாப்பிட முடியுமா? அது உணவை விளுக்கிவிடும். சாப்பிட மாட்டேன் என்று அழக் கூட் ஆரம்பிக்கும். அவ்வாறே ஈசனிடம் நேரே அழைத்துப் போகும் ஆற்றல் பெரியவர்களுக்கு இருந்தாலும் காம் அவனைக் கண் கொண்டு பார்க்கவ்ேண்டுமே! நமக்குத்தான். எத்தனையோ பிறவிகளில் ஏறி மண்டிக் கிடக்கும் மாசு நம் கருத்திலும் கண்ணிலும் படர்ந்திருக்கிறதே. ஆகை யால் நமக்கு இறைவனேக் காட்டிலுைம் காணும் தகுதி. இல்லை; நமக்கும் காட்டும் பெரியவருக்கும் இறைவனுக்கும் பழியை உண்டாக்குவோம். ஆன்ம வளர்ச்சியில் நாம் இன்னும் குழந்தைப் பிராயத்தில் தான் இருக்கிருேம். ஆதலால் மிக மிக உயர்ந்த அநுபவ நிலையை நமக்குச் சொன்னல் விளங்காது என்று நினைத்த பெரியவர்கள்