பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு வரம நல்ல நிலா, பால்போல வீசுகிறது. அது உலகத்துப் பொருள்களுக்கெல்லாம் புதிய மெருகை ஏற்றி, முள் ளானலும் கல் ஆலுைம் பார்த்துக் களிக்கும் தோற்றத் தைத் தந்து களியூட்டுகின்றது. குழந்தைகள் கிலா கிலா வா வா!' என்று குதிக் து விளையாடுகின்றன. வயசுமிக்க வர்கள் விட்டுக்கு வெளியே அமர்ந்து பழங் கதை பேசிக் கொண்டிருக்கிருர்கள். நிலா முற்றத்தில் மனம் ஒத்த காதலர்கள் மதியின் அமுத கிரணத்தால் புதிய இன்பம் பெற்றுத் திகழ்கின்றனர். - இப்படி யாவரும் இன்பக் கடலில் மூழ்கியிருக்கும். போது ஒரு காரிகை மட்டும் வேதனைப்படுகிருள். நிலவின் கதிர் அவளுக்குத் திக்கதிராக இருக்கிறது. அவள் தன் உள்ளத்தைக் கொள்ளே கொண்ட காதலனே அடையாமல் வெதும்புகிருள். உலக வாழ்வே அவளுக்கு - இன்பம்ாக இல்லை. ஊண் சுவையாக இருக்கவில்லை அமுதமும் கசக்கும் கிலே அவள் கிலே. பகல் நேரத்தில் ஏதோ விட்டு வேலயைச் செய்து ஒரு வாறு இந்தக் காதல் கோயின் வேகத்தை மிகுதியாக உண ராமல் பொழுதுபோக்கிள்ை. மாலை வந்ததோ இல்லையோ, காலன் முன் நிற்கும் உயிர்போலத் துடிக்கிருள். * . .”. கால் அரும்பிப் பகலெல்லாம் போதாகி, மால் மலரும்இந் நோய்" என்று வள்ளுவர் கூறும் நோய் அவளிடம் மலர்ந்துவிடு கிறது. மாலை போதாதென்று சந்திரன் வேறு உதயமாகி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆலைக்_கரும்பு.pdf/79&oldid=744446" இலிருந்து மீள்விக்கப்பட்டது