பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 ஆலேக் கரும்பு விட்டான். அவன் மற்றவர்களுக்கெல்லாம் அமுதகிர ணன். இவளுக்கோ நச்சுக் கதிரவனக இருக்கிருன். இந்த இளைய நங்கை நிலவைக் கண்டு படாத பாடு படுவதை அவளுடைய உயிர்த் தோழி கவனித்தாள். காத வியின் உள்ளத்தை இழுத்த ஆடவன் யார் என்ற ஆராய்ச்சி தோழிக்குப் பிறந்தது. அவள் அந்த இரகசி யத்தை அறிந்துகொண்டாள். சீகாழியிலே எழுந்தருளி, யிருக்கும் தோணியப்பனிடந்தான் அவள் காதல் கொண் டிருக்கிருள். சீகாழிக்குக் கொச்சைவயம் என்பது ஒரு திரு நாமம்; கொச்சை என்று சுருக்கிச் சொல்வதும் உண்டு. கொச்சையில் உள்ள பெருமானிடம் காதல் பூண்ட அந்த மடமங்கை அவனே அணுகித் தன் வேட்கையைச் சொல்லவோ, அவனைப் பிறர் மூலமாக அடையவோ முடி யாமல் தவிக்கிருள். அவளுடைய காதலைக் கொச்சைப் பெருமானுக்கு வேறு யாராவது சொல்லி அவனுடைய அருளுக்கு அவளே ஆளாக்கினல் அவள் துன்பம் தீரும். முதலில் அந்தப் பெண்ணின் கருத்தை உணர்ந்து அவள் யாரிடம் காதல் கொண்டிருக்கிருள் என்ற இரகசியத்தைத் தெரிந்துகொள்வதற்கே ஆள் இல்லையே! ஆருயிர்த் தோழி தன்னல் இயன்ற உதவியைச் செய்ய எண்ணினுள் கொச்சைப் பிரானிடம் தானே 萨 சென்று அவனுடைய உடன்பாட்டைப் பெற்று வரலாம் என்று துணிந்தாள். அப்பெருமானிடம் யார் யாரோ அன்பு பூண்டு வேண்டிய வரங்களையெல்லாம் பெற்று இன்புறுகிருர்கள் என்ற செய்தி அவள் க்ாதில் பல கால மாக விழுந்ததுண்டு. "நாமும் ஒரு வரம் வாங்கிக்கொண்டு வரலாம். இந்தப் பெண்ணை ஆட்கொள்ளவேண்டுமென்று கெஞ்சியாவது கேட்டு வரலாம்" என்று எண்ணிப் புறப்பட்டாள். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆலைக்_கரும்பு.pdf/80&oldid=744448" இலிருந்து மீள்விக்கப்பட்டது