பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/81

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு வரம் . 75 தோனியப்பனிடம் வந்தாள். எத்தனையோ பேர்கள் அவனுடைய கோயில் வாயிலில் காத்துக் கிடந்தார்கள். அவர்கள் தங்கள் குறைகளே இறைவனிடம் கூறி வரம் வாங்கிக்கொண்டு சென்ருர்கள். அன்பர்கள் வரும் போது வாடிய முகத்துடன் வருவதையும், போகும். போது பொலிவுபெற்ற முகத்தோடு போவதையும் பார்த்துத் தன் காரியம் வெற்றியடையும் என்ற நம்பிக்கை தோழிக்கு உண்டாயிற்று. 'கூட்டம் எல்லாம் போகட்டும். நாம் மிகவும் இரகசியமான செய்தியை அல்லவா சொல்லப் போகிருேம்? தனிமையிலே கண்டு சொல்வதுதான் முறை என்று அவள் காத்திருந்தாள். எல்லோரும் போன பிறகு, அவள் கோழிப் பெருமான் கோயிலுக்குள் நுழைந்தாள். அருள் கொப்புளிக்கும் கண்ணேயுடைய ஆண்டவன் அவளேக் கண்டவுடன், "உனக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டான். . "எனக்கு ஒரு வரம் வேண்டும்" என்று ஆரம்பித்தாள் தோழி. தன் தலைவியை ஏற்றருள வேண்டும் என்று. சொல்ல எண்ணியே இதை ஆரம்பித்தாள். பெரிய திருவுருவமுடையவர் தோனியப்பர். தோழி, போனவுடன் அவர் திருவுருவம் முற்றும் பார்ப்ப்தற்கு முன்.ே "எனக்கு ஒரு வரம் வேண்டும்" என்ருள். அதற்குள் அவள் கண்கள் மெல்ல அவர் திருமேனி, யைப் பார்த்தன. 'வந்தது அபாயம்' என்று துணுக் குற்ருள் அவள் அந்தப் பெருமானத் தனியே பார்க்க வேண்டுமென்று எண்ணி வந்தவள் அவள், இங்கே எம். பெருமானுடைய பாகத்தில் பேரழகியாகிய உமாதேவி, விற்றிருந்தாள். தோணியப்பனுக்கு உமாபாகன் என்ற பெயர் உண்டு. நம்முடைய காரியம் பலிக்காது. நாம் சொல்லவேண்டியதைக்கூடச் சொல்ல முடியாதுபோல் இருக்கிறதே! என்று சற்றே அவள் ஒன்றும் பேச முடி,