பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 - ஆல்க் கரும்பு விடும். அது இருந்தும் இல்லாததற்குச் சமானமாகி விடும். அப்போது செயலின்றி இருக்க வேண்டும் என்ற கியதி இல்லாமல், கின்ருலும் இருந்தாலும் கிடந்தாலும் சமாதி நிலையில் உண்டாகும் இன்பம் அலேயாமல் தொடர்ச்சியாக இருந்து கொண்டே இருக்கும். இதைச் சகஜ சமாதி என்பார்கள். இந்த கிலேயில் இருப்பவர்கள் பேசினலும் மெளனிகள்; விழித்திருந்தாலும் குருடர்கள்; பல செயல் கள் செய்தாலும் செயலற்றவர்கள். - -- அவர்களே ஜீவன் முக்தர்கள் என்று சொல்வார்கள். இவ்வுலகத்தில் உடம்போடு இருந்தபடியே முக்தியின் பத்தை நுகர்பவர்கள் அவர்கள். அவர்களே சிவம்: அவர்களே சாக்தத்தின் உரு; அவர்கள் அத்வைத கிலேயில் இருப்பவர்கள். . . . . . . இத்தகைய உடசாக்க கில்யைத் தரும் கருனே யாளன் சிவபெருமான். வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் மனத்தின் வேகத்தைக் கெடுத்து ஆட்கொள்ளும் விமலன் அவன். வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க’ என்று பாடுகிருர் மணிவாசகப் பெருமான். ஒடும் மனத்தை அமைதியின்பர்ற் செலுத்தும் முயற்சிக்குச் சிவபெருமானுடைய திருவருள் துணை யிருந்தால் எளிதில்ே சாக்தி பிறக்கும். இறைவன் கங்காதரஞ்க இருக்கும் திருக்கோல்ம், இந்த உண்மையை விளக்குகிறது. வானில் உலாவிய கங்கை இங்கி எழுந்து ஆவிக்கும் அலைகளே உடையது. என்னத் தாங்குவார் யார் என்ற அகங்காரத்தோடு இருந் தது. அதைத் தன்னுடைய சடை ஒன்றிலே இறைவன் ஏற்றுக் கொண்டான். வானுலகமும் மண்ணுலகமும் கிடுகிடாய்க்க ஆரவாரம் செய்துகொண்டு வந்த கங்கை இறைவன் சடையிலே அடங்கி ஒடுங்கி நின்றது. குடத்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆலைக்_கரும்பு.pdf/88&oldid=744456" இலிருந்து மீள்விக்கப்பட்டது