பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/9

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆலேக் கரும்பு 3 பட்டுச் சக்கை சக்கையாக மறுபுறம் வெளிவருவதைக் கூர்ந்து கவனித்தார். கரும்பின் இன்சுவையையோ, கருப் ப்ஞ்சாற்றின் இனிமையையோ, வெல்லப்பாகையோ அவர் அப்போது எண்ணிப் பார்க்கவில்லை. கரும்பு இரும்பு உருளே களின் ஊடே புகுந்து நசுங்கிச் சக்கையாக விழுவதில்தான் அவர் கண்ணும் கருத்தும் ஊன்றின. அதைப் பார்க்கப் பார்க்க அவர் மனத்தில் ஏதோ குழப்பமான உணர்ச்சி தான் உண்டாயிற்று. கொலையாளியின் கையில் அகப் பட்டவர்கள் படும் வேதனையைப்போல அந்தக் கரும்பு வேதனைப்படுவதாக எண்ணினர். கரும்பும் ஒரறிவுயிர் தானே? அதற்கு வாய் இல்லை; அறிவு இல்லை; உணர்ச்சி இல்லை. ஆனல் மனிதன் அம்மாதிரி உருளையினிடையே அகப்பட்டுக்கொண்டால்-? இதை கினேக்கும்போதே கவிஞருக்கு உடம்பு நடுங்கியது. ஆலேயிலிருந்து வரும் கருப் பஞ்சாறு இரத்தமாக அவருக்குத் தோன்றியது. கண்ணே மூடிக்கொண்டு சிறிது நேரங்கழித்துத் திறந்தார். இன்னும் அவருக்கு அந்தப் பயங்கரமான கற்பனே மாறவில்லை. மறுபடியும் கண்ணே மூடிக்கொண்டு சிந்தனையில் ஆழ்ந்தார். மனிதனுடைய உட்ல் நசுங்குவதை அவர் கற்பனை செய்து பார்த்ததோடு நிற்கவில்லை. மரண கால்த்தில் அவனுக்கு எவ்வகை உணர்ச்சி இருக்கும் என்று சிந்தித்தார். எல்லோருமே மரணமடையும்போது எப்படி வேதனைப்படு வார்கள் என்று அடுத்தபடி சிந்தனே தாவியது. எல்லா உயிர்களும் உடல் விடும் இறுதிக் காலத்தில் வேதனைப் படும் என்பதில் சந்தேகமே இல்லை. மரண வேதனைய்ைத் தானே எல்லோரும் பெரிய வேதனையாகச் சொல்கிரு.ர்கள்? யமன் வந்து தன் பாசத்தை வீசும்போது உயிர் படும் அவஸ்தையை எண்ணில்ை குல கடுங்குகிறது. இந்தக் கரும்பு இரும்பு உருளைகளினிடையே படும் அவஸ்தையை வாய்விட்டுச் சொல்வதில்லை. அப்படியே ஆறறிவு படைத்