பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88. ஆல்க் கரும்பு பார்கள். அதை இழுக்கத் தனியே ஒரு சேவகன் இருப் பான். அவன் பங்கா இழுத்துக் கொண்டே இருக்கும் போது அதிகாரி தாங்கிப் போகிருரென்று வைத்துக் கொள்வோம். அது பங்கா இழுப்பவனுக்குத் தெரிந்தால் மேலே பங்காவை இழுக்கமாட்டான் நிறுத்தி விடுவான். காரணம் என்ன? அவன் பங்கா.இழுப்பது அதிகாரிக்குத் தெரியவேண்டும். அவன் வாங்கும் சம்பளம் அப்போது தான் கிடைக்கும். அதிகாரி துரங்கும்பொழுது அவன். இழுப்பதும் இழுக்காததும் எப்படித் ெ தரியும்? அதனல் அப்போது அவன் இழுப்பதை நிறுத்துகிருன். இது இயற்கையான அன்பினல் செய்கிற காரியம் அன்று. - அப்படியானல் இயற்கையான அன்பு எப்படி இருக் கும் என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா? ஒரு குழந்தை நோய்வாய்ப் பட்டிருக்கிறது. அதன் தாய் அருகிலிருந்து கவனித்துக் கொண்டிருக்கிருள். மெல்ல விசிறுகிருள். குழந்தை துரங்கிப் போகிறது. ஆலுைம் அதன் உடம்பில் வேர்வை உண்டாகிறது. தாய், குழந்தை தாங்கிக் கொண்டிருந்தாலும் தான் விசிறுவதை நிறுத்து வதில்லை. குழந்தைக்குத் தான் விசிறுவது தெரியவேண்டும் என்று எண்ணியிருந்தால், தெரிந்து கொள்ள முடியாதபடி தூங்கும்போது விசிறமாட்டாள். ஆனல் அவள் அதை நினைக்கவில்லை. அவளிடத்தில் உள்ள இயற்கையான அன்பு அவளைத் தூண்ட், அப்படிச்செய்கிருள். மலருக்கு மணம் இயற்கையாக இருப்பதுபோலத் தாய்க்கு அன்பு. இயற்கையாக இருக்கிறது. உண்மையான பக்தி அல்லது இயல்பான பக்தியும் இப்படித்தான் எதையும் எதிர்பாராமல் கிற்கும். இறைவன் நம்முடைய பிறவியைப் போக்குவான் என்று கினைந்து செய்வதல்ல இது பள்ளத்தில் தண்ணிர்பாய்வது போல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆலைக்_கரும்பு.pdf/94&oldid=744463" இலிருந்து மீள்விக்கப்பட்டது