பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 ஆலேக் கரும்பு

படி அமைத்தால் அந்தச் சந்தத்திலிருந்தே ஒருவகையான

பொருள் தொனிக்கும். சொல்லப் பெறும் பொருளும் அதற்குரிய சந்தமும் கவியில் இணைந்துவிட்டால் அந்தக் கவி மிகமிக உயர்ந்ததாகிவிடும். ★ சிதம்பரத்தில் நடராசப்பெருமான் ஆனந்த கர்த்தனம் செய்கிருர். அதைப் பாடப் புகுகிருர் குமரகுருபர சுவாமி கள். அதோ இறைவன் ஆடுகிருன் பார்த்தீர்களா ?" என்று காட்டுபவர் போன்று பாடுகிருர் நம்மை அழைத்துச் செல்கிருர், கறைக் கண்டன் ஆடும் திறத்தைக் காண்பதற்கு. - இறைவனுடைய கடனத்தைப் பார்ப்பதற்கு எத் தனேயோ பேர்கள் கூடியிருக்கிருர்கள். அப்படி வந்திருப் பவர்களில் மிகமிகப் பெரியவர்களும் இருக்கிருர்கள். அவர் களையும் ஒருங்கே பார்க்கலாம் என்று வந்திருக்கிருர்கள் பலர். சாதாரண நாளில் கோயிலுக்குத் தரிசனம் செய்ய வருகிறவர்கள் ஒரு கணக்குக்குள்ளே அடங்கியிருப்பார் கள். யாராவது பெரிய தலைவரோ, மந்திரியோ தரிசனத் துக்கு வருகிருர்கள் என்ருல் அன்று என்றும் காணுதபடி கூட்டம் வந்துவிடுகிறது. - இங்கே சிற்றம்பலத்திலும் அப்படித்தான் ஒரே கூட்டமாக இருக்கிறது. வந்திருக்கிறவர்கள் யார் யார் தெரியுமா? அதோ கையிலே பகைவர்களுக்கு யமனுகத் தோற்றுகிற சக்கரத்தை ஏந்திக்கொண்டு நிற்கிருர் திருமால். அருகில் பிரமதேவன் கிற்கிருன். ஆயிரங் கண்ணேயுடைய இந்திரனும் பணிவோடு நிற்கிருன். இத்தன. பெரியவர்கள் வ்ந்திருக்கிறபோது கூட்டத்துக்குக் கேட்க வேண்டுமா? . . . . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆலைக்_கரும்பு.pdf/98&oldid=744467" இலிருந்து மீள்விக்கப்பட்டது