பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆடும் ஓசை 95 வெளியிலிருந்து போகிற் கம்க்கு முதலில் இந்தக் கூட்டங்தான் தெரிகிறது. பிறகு திருமால் முதலியவர்கள் தெரிகிருர்கள், வானுலகத்தை விட்டு இந்தத் தில்லை வனத்துக்கு வந்திருக்கிருர்கள் அவர்கள். கொழுந்தேன் பில்கி ஊற்றுப்போல வருகிற தில்லை வனம் இது. எங்கும். மலர்ச் சோலே நிரம்பியது. அந்தச் சோலேகளைப் பார்த்துத் தேனேக் குடிக்க வரவில்லை அவர்கள். அவர்கள் நேரே பொன்னம்பலத்துக்கு வந்திருக்கிருர்கள். பொன். பளபளக் கும் மன்றம் அது. அதனுடைய சோதி ஒரு பொன் னருவியே தன் அலேகளே வீசுவது போல ஒரு மயக்கத்தைத் தருகிறது. - இறைவனுடைய தரிசனத்தை மற்ற இடங்களிலும் பார்த்துக் கொள்ளலாம். தேவர்கள் திருக்கயிலாயத்திலே பார்க்கலாம். ஆனல் இங்கே காணும் அற்புத நடனக் க்ாட்சி வேறு எங்கும் காணக் கிடைக்காதது. இங்கே அப்படி என்ன காட்சி? குமரகுருபரர் கூட்டத்தை விலக்கிக் கொண்டு அந்த கடனத்தையே காட்டுகிருர்; நடன ஒலியையே கேட்கச் செய்துவிடுகிருர். முதலில் நிதானமாகத்தான் கூட்டத்தில் புகவேண்டி யிருக்கிறது. ン - > " கூற்றிருக்கும் அடல்ஆழிக் குரிசில் முத லோர்இறைஞ்சக் கொழுந்தேன் பில்கி ஊற்றிருக்கும் தில்லவனத்து அசும்பிருக்கும் பசும்பொன்மன்றத்துல் யமனுடைய இயல்பைக் கொண்டிருக்கும் வலிம்ையை யுடைய சக்கரத்தைத் தரித்த திருமால், முதலியவர்கள் பன்னிந்து கிற்க, வளப்பமான தேன் வழிந்து ஊற்றெடுக்கும் கில்லை வன மாகிய சிதம்பரத்தில், துளிப்பது போன்ற காட்சியைத் தரும் பசும் பொன் வேய்ந்த மன்றத்தில்.]. .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆலைக்_கரும்பு.pdf/99&oldid=744468" இலிருந்து மீள்விக்கப்பட்டது