உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.பெளதிகத்தின்
பரிணாம வளர்ச்சி
EVOLUTION OF PHYSICS
(இரண்டாவது கட்டுரைச் சுருக்கம்)

பெளதிக வரலாறு :

(இந்த கட்டுரை பெளதிகத்தின் வரலாற்றினைச் சுருக்கமாகக் கொண்டது. அறிவு மேம்பாட்டினாலும், ஆராய்ச்சி அறிவித்த உண்மைகளாலும், பழைய உண்மைகள் மறுக்கப்பட்ட முறை முதலானவை, இப்பகுதியில் விளக்கியுள் னார். ஆல்பர்ட் ஐன்ஸ்டைன். இந்த கட்டுரையில் வேறு ஒரு விஞ்ஞானியின் கருத்துப் பரிமாற்றத்தையும் ஏற்று சுருக்கமாக கூறுகிறார்.)

தத்துவங்கள் அடிப்படை!

ஒரு பொருளைப் பற்றிய தத்துவ உண்மைகளும், ஆராய்ச்சி ரீதியாகக் கண்டறியப்படும் உண்மைகளும் ஒத்திருப்பது கடினம்! ஆராய்ச்சி விளைவாகக் கண்டறியப்படும் விஞ்ஞான உண்மைகள் காரணமாக, தத்துவரீதியில் அமைந்த அறிவியல் உண்மைகள் முறியடிக்கப் படுகின்றன. ஆராய்ச்சி உண்மைகள் அறிவியல் வளர்ச்சியின் முதுகெலும்பு போன்றவை.

பெளதிகமும் உண்மையும்!

அறிவியல் என்பது குறிப்பிட்ட விதிகளின் தொகுப்பு அல்ல. அதற்காக அவற்றை ஒன்றுக்கொன்று சம்பந்த-