42 □
ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின்
அந்த பிரச்னையை, சிக்கலை, தோற்றுவித்ததே மிகச் சிரமம் அல்லவா? என்ன பாடுபட்டு போடப்பட்டுள்ள ஒரு முடிச்சைக் கண்டறிந்திருப்பார்; அதுவும் விஞ்ஞானக் கண்டுபிடிப்புக் கருவிகள் இன்று போலவா அன்று இருந்தன? எனவே, தனது ஆய்வுக்குரிய ஒரு களத்தை, பிரச்னையை, தோற்றுவிப்பது கஷ்டமானது மட்டுமல்ல; கூர் அறிவுடைய பணியாகும்.
கலிலியோ என்ன தோற்றுவித்தாரோ அந்தப் பிரச்னை, அதன் முடிவை, அவருக்குப் பின்னாலே தோன்றிய பெரும் மேதைகள் எல்லாம், எதிர்ப்பும் மறுப்பும் கண்டறித்து அவரவர்கள் புதிது புதிதான விஞ்ஞான மர்ம விளக்கங்களை விளம்பியதை இந்த நாடே கண்டு வியந்த காட்சிகளாகும்; அறிவின் அற்புதங்களாகும்.
எனவே, ஒளியின் வேகத்தைக் கணக்கிட்ட ஒரு பிரச்னையைத் தோற்றுவித்து ஆய்ந்தவன் மனிதன் மட்டுமல்ல; மனிதனிலே ஓர் விஞ்ஞானி ஆனான்!
சூரியன் தோற்றம்
பற்றிய ஆய்வு!
கிழக்கே அதிகாலையில் எழும் ஞாயிற்றின் அழகுக் கோலமும், மாலையிலே அது மேற்கே மறையும்போது ஞாயிறுக் கோலமும் பல வண்ணங்களாக நமது விழிகளுக்குப் புலப்படுகிறது.
ஆனால், சூரிய ஒளி வெண்மையாகவே காணப்படுகின்றது. இந்த வெண்மையான ஒளி, ஏழு வண்ணங்களால் மட்டுமே உருவாகும் ஓர் உண்மையாகும்.
ஆல்பர்ட் ஐன்ஸ்டைனுக்கு முன்பு இருந்த சர். ஐசக் நியூட்டன் , Sir Issac Newton என்ற விஞ்ஞானி, கி.பி. 1642 முதல் கி. பி. 1727 வரை வாழ்ந்த ஓர் அறிவியல் மேதையாவர்