உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



சார்பு நிலைக் கொள்கை
(THEORY OF RELATIVITY)

ஆல்பர்ட் ஐன்ஸ்டைனுக்கு உலகம் போற்றும் ‘நோபல்’ பரிசு கிடைத்ததற்குரிய முக்கிய காரணம் அவர் கண்டு பிடித்த ‘சார்பு நிலைக் கொள்கை’யே, Theory of Relativity காரணம் என்று உலகில் பலர் எண்ணினார்கள். ஆனால், உண்மை இது அல்ல.

அப்படியானால், ‘சார்பு நிலைக் கொள்கை’ என்றால் என்ன? சார்பு நிலைக் கொள்கை என்றால், அது மற்றக் கண்டுபிடிப்புகளுக்கு துணையாக இயங்கக் கூடிய ஒரு விஞ்ஞான விளக்கக் கொள்கையே தவிர, ஏதோ புதிதாக ஒரு கண்டு பிடிப்பு என்ற தகுதிக்கு உட்பட்ட தத்துவம்

ஆனால், இந்த சார்பு நிலைக் கொள்கை எதைப் பற்றியும் பேசாமல், இருபது ஆண்டு காலமாக ஊமையாக உலவியது. அதை விஞ்ஞானிகள் பலர் அவரவர்நோக்கத்திற்கேற்ப ஆய்வு செய்ததின் பலன்தான், அந்த சார்பு நிலைக் கொள்கையே பிறகு அணுகுண்டு கண்டு பிடிப்புக்குரிய கோட்பாடாக, புரட்சிகரமான கொள்கையாக உருவெடுத்தது, இதுதான் சார்பு நிலைக் கொள்கைக்குரிய பெருமையாகும்.

அறிவியல் உலகில் அப்போது ஆல்பர்ட்டின் புரட்சிகரமான அணுகுண்டு கொள்கையைக் கண்டு அஞ்சிய நாடுகள், அரசியல்வாதிகள், பகைமை நாடுகள் ஏராளம் பேர். ஏன் ஐன்ஸ்டைனே அணுகுண்டு வெடித்த நேரத்தில் அதன் மாபெரும் பயங்கர அழிவைக்கண்டு மனம் கொதித்-