பக்கம்:ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46 □

ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின்

தரர்! கண்ணீர் பெருக்கினார்! மக்களைக் கொல்லவா இந்த அணுகுண்டு அறிவு தோன்றியது? என்று வெறுப்பும் விரக்தியும் சலிப்புமாக புத்திபேதலித்தார் என்றே கூறலாம்.

உலகத்தில் இதற்கு முன்னர், மாறான ஒரு கொள்கையைக் கொண்டிருந்த இந்தக் கோட்பாடு, நாளடைவில் சுமார் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு எதிர்பாரா புரட்சிகரமான கண்டுபிடிப்பாக மாறும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அதற்காக, யாரும் அணுகுண்டு வெடிப்பை ஓர் அதிசயமான சக்தி என்று வியக்கவும் இல்லை!

ஆனால், உலக அறிவியல்வாதிகள் உட்பட சாதாரண குடிமக்கள் வரை, ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் சார்புநிலைக் கொள்கையைப் பற்றியும், இந்த அணுகுண்டு வெடிப்பு சம்பந்தமான பிரச்னை பற்றியும் எதிர்த்தும் பாராட்டியும் பேசாதவர்கள் எவருமில்லை. அந்த அளவுக்கு அவரது சார்புநிலைக் கோட்பாடு ஒரு புரட்சிகரமான கண்டுபிடிப்பாகக் கருதப்பட்டு விட்டது.

இந்த கொள்கையின் அபாயகரமான நிலை இந்த அளவுக்கு உலகை உலுக்கி எடுக்கும் என்று ஐன்ஸ்டைனே ஆரம்பத்தில் நினைக்கவில்லை. இருபது ஆண்டுகளின் அறிவியலார் ஆராய்ச்சிகளுக்குப் பிறகுதான், ஐன்ஸ்டைனால் ஆரம்பத்தில் கணித்துக் கூறிய கோட்பாடுகள் எல்லாம் உள்ளடங்கி இருந்தது என்ற உண்மையை அவரும் உணர்ந்தார், உலகமும் புரிந்து கொண்டது.

உலகப் பத்திரிகைகள் எல்லாம் பாராட்டின! ஐன்ஸ்டைனின் சார்புநிலைக் கொள்கையைப் போற்றிப் புகழ்ந்தன. விஞ்ஞானத் துறையிலே விளைத்த புரட்சி என்று ஐன்ஸ்டைன் மிக மிக பாராட்டப்பட்டார்.

சார்புநிலைக் கொள்கை என்றால் என்ன என்று பத்திரிகையாளர் ஒருவர் ஐன்ஸ்டைனிடம் பேட்டி கண்டார். அதற்கு அவர் பதில் கூறும்போது,