பக்கம்:ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/49

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

□ 47


அழகான ஒரு பெண்ணிடம் நீங்கள் பேசும்போதும், அவளை விரலில் தொடும்போதும், நீங்கள் எப்படிப்பட்ட சந்தோஷத்தைப் பெறுவீர்கள் என்பதை எண்ணிப்பாருங்கள். அதே விரலால் ஒரு நெருப்பு அடுப்பைத் தொடும் போது எவ்வளவு பயத்தையும் அதிர்ச்சியையும் பெற்று, உடனே விரலை எடுத்துக் கொள்வீர்கள் இல்லையா? இது தான் எனது சார்புநிலைக் கொள்கையின் ஆரம்பமும் முடிவும் என்றார். பத்திரிகையாளர் ஏதும் பேச முடியாதவரானார்.

ஐன்ஸ்டைன் வேறு ஒரு அறிவியல் சங்கத்திலே பேசும்போது, அவரை இடைமறித்து, உங்களுடைய சார்புநிலைக் கொள்கையைப் பற்றி சுருக்கமாகக் கருத்து கூறுங்கள் என்று அந்த விஞ்ஞான அவைத் தலைவர் கேட்டார்.

அதற்கு அவர், உலகத்திலுள்ள எல்லாப் பொருள்களையும் வெளியேற்றப்பட்டால், காலமும், அண்டவெளியும்தான் மீதியாக இருப்பது தெரியும் என்பது எனக்கு முன்பிருந்த அறிஞர்கள் கண்ட கொள்கை. ஆனால், எனது சார்புநிலைக் கொள்கையின்படி பார்த்தால், அந்த காலமும்-வெளியும்கூட மற்றப் பொருள்களோடு வெளியேற்றப்பட்டு மறைந்து போகும் என்று சுருக்கமாக அந்த அவையிலே கூறியபோது, அவை அப்படியே அதிர்ந்து போய் ‘அப்படியா!’ என்ற குரலை மட்டுமே எதிரொலித்தது.

இதற்குப் பிறகு, தனது சார்புநிலைக் கொள்கையை விளக்கி, அந்த விதிகளை மெய்ப்பிக்கும் சான்றுகளுடன் ‘தி தியரி ஆஃப் ரிலேடிவிட்டி’ என்ற ஒரு நூலையும் வெளியிட்டார். கணித முறை விதிப்படி இந்த நூல் வெளிவந்தது.

இந்த நூலைப் பின்பற்றி, வழி நூல்கள், விளக்க நூல்கள், செய்முறை வழி நூல்கள், எதிர்ப்பு நூல்கள், ஆதரவு