பக்கம்:ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

□ 49


ஐன்ஸ்டைன் தனது சார்பு நிலைக் கொள்கைக்கு அடிப்படைக் காரணமே ஒளிதான் என்றார். அந்த ஒளியின் தன்மை, வேகம் என்ற உண்மைகளின் அடிப்படையிலே தனது சார்புநிலைக் கொள்கையை உருவாக்கினார்.

அப்படியானால் ஒளியின் இயல்பு, சிறப்பு, என்னவென்றால், அது மிக மிக சக்திவாய்ந்தது. ஒரு விநாடிக்கு 1,88,000 மைல் வேகத்தில் உலகில் பயணம் செய்யும் தன்மையுடையது. ஒளியின் விசை, வேகம் நிலையான ஒன்று. அதைக் குறைவுபடுத்தவோ அதிகப் படுத்தவோ முடியாது! என்றார் ஐன்ஸ்டைன்.

ஒளிக்கும் ஒலிக்கும் உள்ள சார்பு நிலைகள் என்ன என்பதை அவர் விளக்கிய போது, ‘ஒலி ஊடுருவிச் செல்ல ஒர் ஊடகம் அதாவது Medium தேவை, ஆனால், ஒளி அப்படி அல்ல; காலியான வெற்றிடத்திலும் வேகமாகப் பயணம் செய்ய ஒளியினால் இயலும். எனவே, ஒளியின் வேகம், ஒளி தரும் எந்தப் பொருளையும் சார்பு பெறாது! என்று கூறியவர் ஐன்ஸ்டைன்.

அதே போல, ஒளி பரவல் என்பதும், அதாவது Propogation of light என்பதாகும். இது பற்றிய ஆய்வுக் கொள்கை மறுக்கப்படலாயின. ஒளி இங்குமங்கும் அலைகின்ற கொள்கையையும் அதாவது, The wave theaty of lightம் மறுக்கப்ட்டு விட்டது. குழப்பமான இவ்விரு கொள்கைகளுக்கும் முடிவு கட்டும் ஆய்வு தோன்றியது.

கி.பி. 1881-ம் ஆண்டு வாக்கில், A.A. மைக்கேல்சன் என்பவரும் E.W. மோர்லி என்ற இரு விஞ்ஞானிகளும், ஒளி வெவ்வேறு பிரிவுகளில் செல்கின்றன என்பதைக் கணிதப் புள்ளிகளோடு கண்டுபிடித்துக் கூறினார்கள்.

அதனால், சுழலும் பூமியின் எல்லாத் திசைகளிலும் ஒரே நிலையான வேகத்தில் தான் ஒளி பயணம் புரிகிறது