பக்கம்:ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/52

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.50 □

ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின்

என்ற துல்லியமான உண்மையை இந்த இரு விஞ்ஞானிகளும் விளக்கமுடன் கூறினார்கள்.

இந்த இரண்டு விஞ்ஞானிகளின் பரிசோதனை முடிவுக்கு ஏற்ப, பூமியானது நகராமல் இருக்க வேண்டும்; அல்லது ஒளியின் பயணம் பற்றிய , ஈதர்க் கொள்கை தவறாக இருக்க வேண்டும். இந்த சிக்கலான முடிவு விஞ்ஞான உலகத்தை கலக்கியது, குழப்பம் செய்தது.

இந்த முடிவை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஆராய்ந்தார், ஈதர்க் கொள்கையை விலக்கி விட்டார். தவறான முடிவு என்றார்.

ஒளியின் வேகம் நகரும் எந்தப் பொருளையும் சார்ந்திருப்பது ஆகாது; ஒளியின் வேகம் நிலையான ஒன்று; அதனைக் கூட்டவோ குறைக்கவோ எந்தச் சக்தியாலும் முடியாது!

'ஒன்றாக இயங்கும் பொருட்கள் எல்லாவற்றிக்கும் இயற்கை விதிகள் ஒன்றே என்ற முடிவுக்கு வந்த ஐன்ஸ்டைன், விஞ்ஞான உலகத்தை அன்றுவரை குழப்பிக் கொண்டிருந்த ஒளியின் இயல்புக்கு ஓர் உறுதியான முடிவை வழங்கினார்.

ஒளியைப்பற்றி ஐன்ஸ்டைன் தனது இறுதியான முடிவுக்கு வருவதற்கு, A.A, மைக்கேல்சன் ஆய்வு பெரும் உதவியாக அமைந்தது என்று கூறலாம். சார்புநிலைக் கொள்கை-அதனால் நிலை நிறுத்தப்பட்ட ஒரு புரட்சிக் கோட்பாடாக விளங்கியது.

ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் சார்பு நிலைக் கொள்கையை நம்பலாமா? உண்மையானதா? என்பதை உடனடியாக ஆராய்ந்து அதனை எப்படி மெய்ப்பிப்பது என்ற ஐயம் பல விஞ்ஞானிகளுக்குத் தோன்றியது.

எந்த ஜெர்மனி ஐன்ஸ்டைனை எதிர்த்ததோ அந்த ஜெர்மனி நாடு, அவருடைய “தி தியரி ஆப்ஃ ரிலேடி