பக்கம்:ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

□ 51

விட்டி” என்ற நூலின் விதிகளுக்கு ஏற்றபடி ஆராய்ச்சி செய்தது! முடியாத ஆய்வாகவே அவர்களுக்கு அது தென்பட்டது.

ஐன்ஸ்டைன் படித்த சூரிக் பல்தொழில் அறிவியல் ஆய்வு மன்றம், அமெரிக்க விஞ்ஞானிகள் அவைகள், சுவிட்சர்லாந்து விஞ்ஞானக் கழகம், இதாலி அறிவியல் ஆய்வு மன்றங்கள், மதகுரு சபைகள், போன்ற பற்பல மன்றங்கள் எல்லாம் ஆட்வு நடத்திப் பார்த்தன! ஒவ்வொரு நாட்டு விஞ்ஞானத் துறையும் ஐன்ஸ்டைனின் கோட்பாடுகள் அதிசயமானவை, மாயாஜாலமானவை, என்றெல்லாம் கருத்துக்களை வெளியிட ஆரம்பித்தனவே தவிர, உண்மை என்ன? முடிவு என்ன? என்பதைக் கூற முடியாது தவித்தன-திணறின- பொறாமைப்பட்டன! ஆனால், ஐன்ஸ்டைன் ஆராய்ச்சியைப் பொய் என்று கூறமட்டும் அவர்களால் முடியவில்லை.

ஐன்ஸ்டைனது புவி ஈர்ப்புக் கொள்கை என்னவென்றால், சூரியன் அருகாமையில் பயணம் செய்யும் ஒளிக்கிரணம், சூரியனது ஈர்ப்பு விசையால் கவர்ந்து இழுக்கப்படும். இதனால், அந்த ஒளிக்கிரணம், தனது பாதையிலே இருந்து விலகும்; என்பதுதான்.

ஐன்ஸ்டைனுடைய ஆய்வில் உலகில் உள்ள பொருள்கள் தம்மைச் சுற்றிலும் புவி ஈர்ப்புப் புலம், அதாவது Gravitation field ஒன்றினைத் தோற்றுவிக்கும் என்பது ஒரு விதியாகும்.

கதிரவன் அருகாமையிலுள்ள விண்மீனிலிருந்து வெளிப்படும் ஒளிக்கிரணம் சூரியனது உட்பாகத்தை நோக்கி கவர்ந்து இழுக்கப்படுகின்றது.

இவ்வாறு கவர்ந்து இழுக்கப்படும் காட்சியை, பூமியிலே இருந்து பார்த்தால், அந்த விண்மீன்களின் எதிரொளி, அதாவது பிம்பம், நிழல், சூரியனுக்கு அப்பால் சிறிது தள்ளித்தான், விலகி இருப்பதாகத் தென்படும்.