உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

□ 53

படுவதால், சற்றே விலக நேரிடும்’ என்ற ஐன்ஸ்டைன் கொள்கையும் தக்க பரிசோதனை மூலமாக மெய்ப்பிக்கப்பட்டது.

ஒன்றாக இயங்கும் தொகுதிகள் எல்லாம் ஒரே விதமான இயற்கை நியமங்க்ளை அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றன.

இந்த விதிகள் இயங்கும் நிலையைச் சார்ந்திருக்கவில்லை என்பதை ஐன்ஸ்டைன் ஆய்வால் தெரிந்தது.

இந்த சோதனை உண்மை என்று உலகம் நம்பியதும், மக்களும் மற்ற விஞ்ஞானிகளும் சார்பு நிலைக் கொள்கை ஒரு புரட்சிகரமான கொள்கைதான் என்று நம்பினார்கள்.

ஐன்ஸ்டைன் ஆராய்ச்சியின்படி வெளி Space என்பது சார்புடையதாகும் என்று தெரிந்தது. இந்த வெளியில் நாம் ‘ஒரே இடம்’ என்று குறிப்பிடுவதும் சார்பு திலையே.

வெளியில் பொருள்களின் நிலையும் சார்புடையதே. பொருள்களின் நிலை பற்றி நாம் பேசும்போது, மற்ற பிற பொருள்களைச் சார்ந்துள்ள அதனதன் நிலைகளையே நாம் சார்பு நிலை என்று குறிக்கின்றோம்.

சார்பு இயக்கம்
ஒன்றால் என்ன?


'ஒன்றுக்கொன்று சார்பு உடையனவாய், நேரான பாதையிலும், ஒன்றான ஒரு முறையிலும் இயங்கும் பொருள்களின் இயக்கம் ஒரே விதமான நியமங்களின் அடிப்படையில் இயங்குகிறது. இதுதான் சார்பு நிலை இயக்கம் என்ற தத்துவத்தின் விளக்கமாகும்.