நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்
□ 55
யிலேயே நீடித்து, இருக்கும். அல்லது, நேரான பாதையில் சீரான வேகத்தில் இயங்கும் பொருள் ஒன்று, அதே நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும். இதுதான் மாறா நிலைக் கொள்கை எனப்படும்.
விசையால் தாக்கப்பட்டாமல், இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு பொருள், எப்போதும் சரி சமமான வேகத்தில் நேரான பாதையில் இயங்கிக் கொண்டிருக்கும். இதே போல நிலையாக உள்ள ஒரு பொருளும் விசையால் தாக்கப்படாதவரை ஆடாமல், அசையாமல் நிலைத்திருக்கும். இருந்தாலும், இயங்கும் பொருள்களின் இயக்கம் தடைபட உராய்வு விசை காரணமாகிறது.
செல்லும் பாதையில் உராய்வு விசை இல்லாமல் இருத்தால், சீரான வேகத்தில் நேரான பாதையில் சென்று கொண்டிருக்கும் ஒரு பொருள் எப்போதும் அதே வேகத்தில்தான் இயங்கிக் கொண்டிருக்கும்.
பெளதிகக் கலையின் வளர்ச்சிக்குப் பெரிதும் துணைபுரிந்த இயக்கத்தின் சார்பு நிலைத் தத்துவம் அறிவியல் உலகில் ஓர் அரிய கண்டுபிடிப்பு சாதனையாகும்.
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் கி. பி. 1905 ம் ஆண்டில் அவருக்கு இருபத்தைந்து வயதாக இருக்கும் போது வெளியிட்ட ஆய்வுதான், ‘காலமும் சார்புடையதே' என்ற கொள்கை,
ஆனால், இயற்கையைப்பற்றி மனிதன் ஆராய்ந்து அறிந்த சிந்தனைகளை காலமும் சார்புடையதே என்ற ஆய்வு மாற்றுவதாய் அமைந்தது.
பூமி உருண்டை என்று வெளியிட்ட விஞ்ஞானிகளது உண்மை மக்களிடையே மகிழ்வைக் கொடுத்தபோது, என்ன வியப்பு ஏற்பட்டதோ அதே ஆச்சர்யம் காலமும் சார்புடையதே என்ற உண்மைக்கும் ஏற்பட்டது.