56 □
ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின்
காலச் சார்பு நிலை தத்துவமும், அதன் மறுதலை உண்மைகளும் சிறப்பு சார்புநிலைக் கொள்கை என்ற பிரிவில் அடங்கியது.
வெளி, பொருள் முதலானவை சார்பு நிலை உடையனவாய் இருப்பது போன்றே காலமும் சார்பு நிலை உடையதாக உலகத்தை இயங்குகின்றது என்பது ஐன்ஸ்டைனுடைய வாதமாகும்.
எந்தப் பொருளும் ஒளியின் வேகத்தில் பயணம் செய்ய முடியாது என்பது சார்புநிலைக் கொள்கையின் முடிவுகளில் ஒன்றாகும்.
பொருண்மை
என்றால் என்ன?
ஒரு பொருளிலுள்ள பொருளின் அளவே அந்தப் பொருளின் பொருண்மை Mass எனப்படும். வேகத்தின் வளர்ச்சியை எதிர்க்கும் ஆற்றலே ஒரு பொருளின் பொருண்மை என்றும் கூறுவதுண்டு.
பழங்கால பெளதிக விதிகளின்படி, இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு பொருளின் பொருண்மை மாறாது. பெருண்மைக்கும், பொருட்களின் இயக்கத்திற்கும் சம்பந்தமில்லை. ஒரு பொருளின் பொருண்மை நிலையானது மாறாதது; இவை பழங்கால பெளதிக விதிமுறைகளாகும்.
ஆனால், ஐன்ஸ்டைனுடிைய சார்பு நிலைக் கொள்கை ஆய்வின்படி இந்தக் கருத்துகள் தவறானவையாகும்.
இயங்கும் ஒரு பொருளின் பொருண்மை நிலையானது அல்ல. அது வேகத்திற்கு ஏற்றபடி மாறும் தன்மை பெற்றது என்பதுதான் ஐன்ஸ்டைன் ஆய்வில் கண்ட விதியாகும். இவ்வாறு ஒரு பொருளின் பொருண்மை வேறு-