பக்கம்:ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



ஐக்கிய வெளித்தத்துவம்

UNIFIED FIELD THEORY

உலகத்தின் தோற்றத்தை நிர்ணயம் செய்யும் பொறுப்பை அகண்ட வெளித்தத்துவ வித்தகர்கள், பெரும்பாலும் தத்துவ ஞானிகளிடமே விட்டு விட்டார்கள் என்றாலும், தற்காலத் தத்துவ நிபுணர்களில் ஆராய்ச்சி அனுபவம் பெற்ற குறிப்பிட்ட சிலரால் கூட பெளதிக உண்மைத் தத்துவத்தின் புதிரை, உட்பொருளை, மர்மத்தை, அதன் மாயத் தோற்றங்களை அறிந்துகொள்ள முடியவில்லை. அதாவது இன்றைய அறிவியல் தத்துவ ஞானத்தை (Philosophy) நோக்கியே சென்று கொண்டிருக்கின்றது.

மாமேதை ஐன்ஸ்டைனின் அறிவியல் உண்மைகள் தத்துவ ஞானம் என்ற அறிவுமுகட்டின் சிகரத்தை தொட்டுக் கொண்டிருக்கின்றன.

உலகத்தின் மனித உணர்வுக்கும், சமூக உணர்வுக்கும், சமுதாய உணர்வுக்கும் அப்பாற்பட்ட ஒரு சக்தி என்றும் நிலையானதாய், நிரந்தரமானதாய் இருப்பதை லோகாயுதவாதிகள் ஒப்புக்கொள்வதில்லை. அவர்களுள் ஒருவராக ஐன்ஸ்டைனும் சில நேரங்களிலே காணப்பட்டார். ஆனால், இவ்வாறு கூறப்பட்டவர்கள் கருத்து எவ்வளவு தவறானது என்பதை ஐன்ஸ்டைனே மறுக்கிறார் பாருங்கள்.

உலக மாயை உணரும் அனுபவம் ஒன்றுதான் வினோதமான, அழகு வாய்ந்த சிறப்பான உணர்ச்சியாகும். உண்மையான அறிவியலின் கருவூலம் அந்த