பக்கம்:ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



66 □

ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின்


வெளிப்படுத்தும் மகத்தான், எல்லையற்ற சக்தியைப் பாராட்டும் அவையடக்கத்தில்தான் அடங்கியுள்ளது.

அறிந்து கொள்ள முடியாத இந்த உலகத்தின் மிகப் பெரிய மனித சக்திக்கு ஓர் காரணத்தை நம்பும் ஆழ்ந்த உணர்ச்சிதான் கடவுளைப் பற்றிய எனது கொள்கையை, எண்ணத்தை உருவாக்குகின்றது” என்கிறார்.

விஞ்ஞானத்தின் ஆய்வைப் பொறுத்தவரையில் பெளதிக் உண்மை என்ற தத்துவத்தின் (Physical Reality) அருகில் செல்வதற்கு இரண்டு வாயிற்கதவுகள் தற்சமயம் இருக்கின்றன.

ஒன்று இப்போது புதிதாக அமெரிக்காவிலே உள்ள சிலிபோர்னியாவில், “பலோமர்” மலை உச்சியில் உருவாக்கப்பட்டிருக்கும் மிகப்பெரிய வான்நோக்கும் கருவியேயாகும்.

இந்த வானை உற்றுக்கவனித்து நோக்கம் கருவி மூலம் அதாவது வானதா்சினியின் விஞ்ஞானிகள் தலைமுறை வரையில் வானசாஸ்திர விஞ்ஞானிகள் கனவு கூடக் கண்டிராத அளவில், பரந்தவெளியின் மிகத்தொலைவான தூரத்தை ஊடுருவிப் பார்க்க முடிகின்றது.

இதுவரையில், அந்த வான்நோக்கிக் கருவி மூலமாக 50 கோடி ஒளி ஆண்டு தூரத்தில் உள்ள வெளிமண்டல உலகத்தையும், அதனுட் பொருட்களையும்தான் பார்க்க முடிந்தது. ஆனால், இப்போது புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் மிகப்பெரிய வான்நோக்கும் கருவி வாயிலாக, 100 கோடி ஒளியாண்டு தூரம் வரையில் உலகத்தின் வெளி சமுத்திரத்தின் சீரான அமைப்பையும் அங்கு சுற்றித் திரியும் எண்ணற்ற தொலைதுார உலகத்துத் தீவுகளையும் ஊடுருவிப் பார்க்க முடியும். அவ்வளவு தொலைதூரத்தில்