பக்கம்:ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/71

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

□ 69


உலகத்தின் விதிக்குள் இணைந்துவிட்டது. ஒப்புமைத் தத்துவம் ஆகர்ஷண விசை என்பதை எவ்வாறு கால வெளித் தொடர் நிகழ்ச்சியின் ஒரு ஜியோமெண்டரி கணக்குத் தன்மையாக்கிவிட்டதோ, அவ்வாறே ஐக்கிய வெளித்தத்துவம் உலகத்தின் பெரிய சக்தியாகிய மின்காந்த விசையையும், காலவெளித்தொடர் நிகழ்ச்சியின் ஒருதன்மையாக்கி விட்டது.

“ஆகர்ஷணம், மின்காந்தம் என்ற தனித்தனியான அமைப்புகள் இந்த பரந்த வெளியில் உள்ளன என்ற கொள்கை சித்தாந்த வகையில் ஒரு பொழுதும் ஒப்புக் கொள்ள முடியாதது” என்று ஐன்ஸ்டைன் ஒரு நேரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், அவர் எவ்வளவு முயற்சி செய்தும், மின் காந்த விதிகளைப் பொது ஒப்புமைத் தத்துவத்தின் கீழ் அவரால் கொண்டுவர முடியவில்லை.

ஐன்ஸ்டைன் அவரது ஆய்வுக் கால வயதில் முப்பத்து மூன்று ஆண்டுகள் இடைவிடாது கணித விதிகளின்படி விவாதங்கள் புரிந்து, இறுதியில் அவர்தம் லட்சியத்தை ஒருவாறு தமது புதிய ஐக்கிய வெளித் தத்துவத்தின் மூலம் வெற்றி கண்டு விட்டார்.

மின்காந்தவிசையும், ஆகர்ஷனை விசையும் கவனித்து நோக்கும்போது இரண்டும் ஒன்று தானா என்று சிலர் கேட்கலாம்... ஸ்தூலமாகப் பார்க்கும் போது அவை இரண்டும் ஒன்றே என்று கூறுவது சரியாகாது.

எடுத்துக்காட்டாக, பனிக்கட்டி, நீர், நீராவி இந்த மூன்றையும் ஸ்தூலமாக ஒரே பொருள் என்று கூறுவது தவறு. அதே நேரத்தில் அந்த மூன்று பொருட்களும் வெவ்வேறு பெளதிக நிலைகளில் வேறுவேறாகக் காணப்படும் ஒரே பொருள் என்று கூறுவதுதான் உண்மையானதாகும்.