உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



70 □

ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின்



ஐக்கிய வெளித்தத்துவமும், மின்காந்த விசை, ஆகர்ஷண விசை இவையிரண்டும் உலக உண்மையின் அடித்தனத்தில் ஒன்றாக இணைந்து நிற்கும் வெவ்வேறு நிலைகளே என்று கூறுகின்றது.

ஐக்கிய வெளித் தத்துவத்தின் யூகங்கள் அனைத்தும் வருங்காலப் பரிசோதனைகளுக்கு ஈடு கொடுத்து நிலைத்துவிடுமானால், அதாவது, அதன் கணித விதி சூத்திரங்களிலிருந்து பகுதித் தத்துவத்தின் சாம்யங்களை அடைந்து விடக் கூடுமானால், பொருளின் இயைபு, அடிப்படைத் துகள்களின் அமைப்பு, கதிர்வீசலின்! இயக்கம், மற்றுமுள்ள அணு உலகத்தின் புதிர்களுக்கு எல்லாம் தகுந்த விடைகளைப் புதிய அறிவைக் கொண்டு உறுதியாய் ஊடுருவிப் பார்த்து விடலாம். ஆனால், இந்த ஆராய்ச்சிகள் எல்லாம் ஐக்கிய வெளித் தத்துவத்தின் உப விளைவுகளே (By Products).

இந்த தத்துவத்தின் மாபெரும் வெற்றி இதன் பெயரின் முதல் வார்த்தையில் அடங்கியுள்ளது.

இன்றைய வரையில், அறிவியல் மூலம் பெளதிக உலகத்தைப் பற்றி மனிதன் கண்டுணர்ந்த கொள்கைகள் எல்லாம் ஒரே அடிப்படைக் கொள்கையில் ஐக்கியப்படுத்தி விடுவதுதான் ஐக்கிய வெளித் தத்துவத்தின் லட்சியமாகும்.

நூற்றாண்டுக் கணக்கில் நடந்து வரும் கண்டுபிடித்தல், தத்துவம், ஆராய்ச்சி, காரண விவரங்கள் போன்ற பல்வேறு விஞ்ஞான விளைவுகள் கால வட்டத்திற்கு ஏற்றவாறு அமைந்து ஒரே தன்மையில் இயங்கி வருகின்றன.

முதன் முதலில் விஞ்ஞானம், உலகிலுள்ள எல்லாப் பொருட்களையும் 92 அடிப்படை மூலகங்களில் அடக்-