பக்கம்:ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

□ 71

 கியது, பிறகு இந்த அடிப்படை மூலகங்கள் ஒரு சில அடிப்படைத் துகள்களில் அடங்கி விட்டன. உலகில் காணப்படும் சக்திகள் இவ்வாறே ஒரே மின்காந்த விசையின் பல்வேறு நிலைகள் என்ற கொள்கை நிறுவப்பட்டது.

ஒளி,
வெப்பம்
எக்ஸ்ரே
ரேடியோ கதிர்கள்

காமா கதிர்கள், இவை எல்லாம் வெவ்வேறு அலை நீளங்களையும், அதிர்வுகளையும் கொண்ட ஒரே மின்காந்த சக்தியே என்ற கொள்கை இப்போது விஞ்ஞான உலகில் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது.

இறுதியாக அந்த பரந்த உலகம் முழுவதும் பரந்த வெளி, காலம், பொருள், சக்தி, ஆகர்ஷணம் என்ற இந்த கொள்கைகளின் ஆற்றலில் அடங்கி விட்டது.

ஐன்ஸ்டைனுடைய சிறப்பு ஒப்புமைத் தத்துவத்தின் மூலம் பொருளும், சக்தியும் ஒன்றே என்று நிருபிக்கப்பட்டு விட்டது. இப்போது ஐக்கிய வெளித் தத்துவம் இவை அனைத்தையும் ஒரே கொள்கையின் அடிப்படையில் கொண்டு வந்து விடும் சிறப்பு நிலையை அடைந்துள்ளது.

அமைதியான ஒரு நீர்நிலை, ஒரே நீர்நிலை. இதில் துள்ளி விளையாடும் மீனினங்களின் செயல்பாடுகளால் இந்த நீர்நிலையின் மேற்பரப்பில் வேறுபட்ட எண்ணற்ற சிறு அலைகள் உருவாகின்றன.

உலகமும் இதேபோல் அமைதியான ஒரு காலவெளித் தொடர் நிகழ்ச்சி. துள்ளியோடும் மின் துகள்களும்,