பக்கம்:ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/75

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

□ 73


எனவே, உலகத்தைப் பற்றிய மனிதனின் புலன் உணர்வுகளும், மன உணர்வுகளும் ஒன்று சேர்ந்து இரண்டறக்கலந்து விடும் போதுதான் அவையனைத்தும் உலகத்தின் ஒருமைப்பாட்டில் நிலைத்து விடுகின்றன.

பெளதிக தத்துவங்களின் இந்த ஐக்கியத்தைளே ஐன்ஸ்டைன், விஞ்ஞானத்தின் மாபெரும் லட்சியம் என்று குறிப்பிட்டார்.

ஐக்கிய வெளித்தத்துவம் இந்த லட்சியத்தை தொட்டுவிடுகிறது. புலன்களாலும், மனத்தாலும், உணர்ந்துத் அறிந்து, பரிசோதனைகளின் மூலம் காணக்கிடக்கும் எண்ணற்ற உண்மைகளை எல்லாம் மிகக்குறைந்த எண்ணிக்கையுள்ள கொள்கைகளின் மூலம் தீர்க்கரீதியில் விரித்து, விளக்கிப் பார்ப்பதுதான் இந்த விஞ்ஞானத்தின் மாபெரும் லட்சியமாகும்.

உலகத்தில் நமது புலன்களும், மனமும் உணரக்கூடிய பல்வேறு தனித்தனி நிலைகளைப் பற்றிய கொள்கைகளின் ஐக்கியமான கூட்டுருவத்தைப் பார்க்கும் லட்சியம் விஞ்ஞானத்திற்கு மட்டும் ஏற்பட்டதல்ல; மனிதன் தோன்றிய நாள் முதல் அவனுடைய அறிவின் மகத்தான் லட்சியமும் அதுவே. அந்த லட்சியத்தை நோக்கியே மனிதனுடைய அறிவுப் பரிணாமம் சென்று கொண்டிருக்கின்றது. தத்துவ ஞானிகளும், விஞ்ஞானிகளும் ஒன்றுகூடி தங்களுடைய வெவ்வேறு உணர்வுகளால், சிந்தனைகளால், மனித சமுதாய வளர்ச்சிக்குரிய எண்ணங்களால் உந்தப்பட்டு, மாறிக்கொண்டே இருக்கும் நிலையற்ற மாய உலக நிலைகள் எல்லாவற்றுக்கும் காரணமாக நிற்கும் நிலையான, நிரந்தரமான, தத்துவ ஞானக் கண்டுபிடிப்புகளை அறிந்துகொண்டு வரும் வழிகளைத் தேடிச்சென்று கொண்-

ஆ-6