பக்கம்:ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

□ 51

யறுப்புக்கு உட்பட்டிராமல், கட்டுப்பாடற்ற தளர்ந்த, மிகப் பரப்பால் திகழ்கின்ற தாராள மனப்பான்மையை உருவாக்குகின்ற முழு அளவுக்குத் திறந்திருக்கின்ற அகலமான அளவினை உடையனவாக உள்ளதாகக் கண்டு பிடித்தார் மற்றவர்களுடைய மூளையை விட ஐன்ஸ்டைனுடைய மூளை 15 சதவிகிதம் அகன்று, விசாலமானமாக அவருடைய மூளை அமைப்பு முறை இருந்தால்தான் அவரது சிந்தனை எல்லாம் மிகச்சிறப்பாக அமைந்துள்ளதற்கு அடிப்படைக்காரணம் என்று அவர் அறிவித்துள்ளார்.

எனவே, ஐன்ஸ்டைனுடைய சிந்தனை மற்றவர்கள் மூளையின் சிந்தனையை விட மிக நீண்ட எதிர்கசலங்களுக்கும் பயன்படும் சிறப்புணர்ச்சியை அவரது மூளை உருவாக்கிக்காட்டியுள்ளது என்று கூறினார்.

அறிவியல் சிந்தனையாளர்கள் ஐன்ஸ்டைனுடைய விஞ்ஞான சிந்தனைகளைப் பற்றி விளக்கியபோது, ‘ஐன்ஸ்டைனுடைய சிந்தனையில் எதிரொலிக்கும் சொற்கள் எல்லாம் எந்த அமைப்புடனும் சேர்ந்து வெளிவருவிதில்லை. ஏறக்குறைய அவரது கற்பனைகள் எல்லாம் ஒரு எதிர்காலச் சிந்தனைக்குப் பயன்படும் ஒளிசக்தி வாய்ந்த சொற்களாக, தனித்தன்மையுடன் எதிரொலித்தன’ என்று இன்றும் அவர்கள் பாராட்டுகிறார்கள், அறிவியல் உலகமும் அவரை பாராட்டிக்கொண்டு இருக்கிறது.

அறிவியல் மேதை ஐன்ஸ்டைன் அறிவியல் துறையில் தான் அற்புத விந்தைகளைப் புசிந்தார் என்யதல்ல. மனித வாழ்க்கையின் விஷயங்களைப் பற்றியும் சிந்தித்தவர் ஆவார். விஞ்ஞானத்தின் விளக்கங்கள் எவ்வாறு சிறப்பானவையோ அதனைப் போலவே, அவரது சமுதாயச் சிந்தனைகளும் சிறப்பாகச் சிறந்தன.

மனிதன் எப்போது உயர்ந்தவனாகக் காணப்படுகிறான் தெரியுமா என்ற கேள்வியை மனித சமூகத்தைப்