பக்கம்:ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78 □

ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின்

பார்த்துக் கேட்ட ஐன்ஸ்டைன், அதற்குரிய பதிலை கூறும் போது,சிந்தனை செய்யும் தனித்திறன் காரணமாகவே மனிதன் உயர்ந்தவனாகக் கருதப்படுகிறான் என்றார். தனக்கென்று தேவைகள் எவையும் வேண்டியதில்லை. சிந்தனை மட்டுமே முக்கியமானது. சிந்தனையால் எதையும் சந்திக்க முடியும். மனிதனாகப் பிறந்தவன் எவனும் கட்டாயமாகச் சிந்திக்க வேண்டும், சிந்திப்பவன்தான் மனிதன். அவன் சிந்திக்கச் சிந்திக்கத்தான் மனிதனுடைய எண்ணங்கள் உரிய உருப்பெற்று சிறப்படையும். சிந்திப்பது மனிதனது சீரிய உரிமை, தனி உரிமை என்று சிந்தனையின் சிறப்பைப்பற்றி ஐன்ஸ்டைன் கூறியுள்ளார்.

தற்கால அறிவியல் அறிஞர்களில் தலைசிறந்த மாமேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன். இவர் 1879-ம் ஆண்டு ஜெர்மனியில் அல்ம் என்ற நகரில் பிற்ந்த ஒரு யூத இன விஞ்ஞானி.

இனம் வயதிலேயே இந்த விஞ்ஞானி விஞ்ஞான உலகத்தில் விஞ்ஞானிகளே வியக்கத்தக்க விந்தைகளைப் புரிந்த வித்தகராகவே விளங்கியவர் ஆவார்.

ஐன்ஸ்டைன். தனது ஐந்தாவது வயதிலே காந்த ஊசியின் இயக்கத்தை ஆராய்ந்தார். சித்தாந்த விஞ்ஞானத்தில் (Theoretical Physics) மிகுந்த ஆர்வமுடையவராக இருந்ததால், அதை அவர் ஆழமாக ஆய்வு புரிந்தார். கணித அறிவும் பெளதிக அறிவும் இருந்தால்தான் பிற ஆராய்ச்சிகளைச் செய்வமுடியும் என்பதால், அவர் ஸ்விஸ் பாலிடெக்னிக் பள்ளியில் நான்கு ஆண்டுகள் படித்து அறிவியல் அறிவைப் பெற்றார்.

இந்த விஞ்ஞான மேதையின் ஐன்ஸ்டைன்தான், நியூட்டனுக்குப் பிறகு தோன்றிய உலகின் மாமெரும் அறிவியல் மேதையாகத் திகழ்ந்தார்.