பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/101

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆணிமுத்துகள்

99


இயங்கும் என்றும் உரைக்கலாம். மேலும், காணுதல் என்பதற்குச் செய்தல் என்ற பொருளும் உண்மையின், தனக்கு எப்படி எப்படி இருக்கவேண்டுமோ, அப்படி அப்படி. எல்லாம் புதிதாய் ஓர் உலகத்தைச் செய்து அமைத்துக் கொண்டதுபோல் இவ்வுலகம் இருக்கும் என்றும் உரை கூறலாம். 'செய்து வைத்தாற்போல இருக்கிறது' என்று உலக வழக்கில் கூடச் சொல்லுகிறோம் அல்லவா? இன்னும் இப்படி எத்தனை நயங்கள்! எத்தனை கற்பனைகள்! அம்மம்மா!

அறத்துப்பால்
இல்லறவியல் - இல்வாழ்க்கை
முயல்வாருள் எல்லாம் தலை
"இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவ னென்பான்
முயல்வாரு ளெல்லாந் தலை"

(பதவுரை) இயல்பினான் = இயல்பான ஒழுக்க முறையுடன், இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் = குடும்ப வாழ்க்கை நடத்துபவன் என்று புகழ்ந்து பேசப்படுபவன், முயல்வாருள் எல்லாம் தலை = (வேறு நன்மை பெற முயல்பவர்களுக்குள் எல்லாம் முதன்மையானவன் ஆவான், (இயல்பினான் என்பதின் இறுதியிலுள்ள 'ஆன்' மூன்றாம் வேற்றுமை உருபு )

(மணக்குடவர் உரை) நெறியினானே யில்வாழ்க்கை வாழ்பவ னென்பான், முயல்வா ரெல்லாரினுந் தலையாவான், முயறல் - பொருட்கு முயறல்.