102
ஆழ்கடலில்
பாளியாய் அல்லது பெரிய துறவியாய் நூறாண்டு வாழ்ந்திருந்தாலும் அவனது வாழ்வு பதினெட்டு வயதுப் பையனது வாழ்வேயாகும். சாவு - வாழ்வுக் காரியங்களில் சமூகம் அவனுக்கு முதன்மை கொடுப்பதில்லை. நல்ல பிள்ளை குட்டி பெற்ற நரைத்த தலைகளையே நாடுவர் மக்கள், அவர்களுக்குத்தான் மனித வாழ்வின் முழுப் பூட்டுத்திறப்பும் தெரியும். அவர்களே - அவர்தம் அறிவுரைகளே மற்றவர்க்கு வழிகாட்டியாகும். எனவேதான், இயல்பினால் இல் வாழ்க்கை வாழ்பவன், அங்ஙனம் வாழாது வேறு வழியில் வாழ முயலுகின்ற மற்றவர்க்கெல்லாம் தலைமை தாங்குகிறான். இப்போது புரிந்திருக்குமே இக்குறளின் உட்கிடை!.
- "ஆற்றி னொழுக்கி யறனிழுக்கா வில்வாழ்க்கை
- நோற்பாரின் நோன்மை யுடைத்து"
(பதவுரை) ஆற்றின் ஒழுக்கி = (ஓர் இல்லறத்தான் தன் - மனைவி மக்கள், துறவிகள் முதலானோரையும்) நல்ல வழியில் நடக்கச் செய்து, அதன் இழுக்கா இல்வாழ்க்கை - (தானும்) நல்லறத்திலிருந்து தவறாது நடத்துகின்ற இல்வாழ்க்கையானது, நோற்பாரின் - தவஞ்செய்வாரைக் காட்டிலும், நோன்மை உடைத்து = தவவலிமை உடையதாகும், (ஆற்றின் - ஆறு = நல்ல நெறி; இழுக்குதல் = தவறுதல் - இழுக்கா(த) = தவறாத.)
(மணக்குடவர் உரை) பிறரையும் நன்னெறியிலே ஒழுகப் பண்ணித் தானும் அறத்தின்பா லொழுகும் இல் வாழ்க்கை தவஞ்செய்வாரினும் வலியுடைத்து.
(பரிமேலழகர் உரை) தவஞ்செய்வாரையுந் தத்தம் நெறியின்க ணொழுகப் பண்ணித் தானுந் தன்னறத்திற் றவறாத இல்வாழ்க்கை அத்தவஞ் செய்வார் நிலையினும் பொறையுடைத்து.