பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110

ஆழ்கடலில்


அவாவா இது? அல்லது, தலைவியின் இயற்கையழகைப் புரிந்து கொள்ள முடியாத குருட்டு மடமையா இது? அல்லது இவளுக்கு மேலும் மேலும் அழகு செய்து என்னைப் போன்ற 'இளிச்சவாய்' இளைஞர்களை இன்னற் படுத்த வேண்டுமென்ற இழிநோக்கந்தானா இது? பின்னே என்ன காரணம்? என்று காலால் தரையை இடித்துக் கையால் பலகையைக் குத்திப் பேசிக் கேட்பவனைப் போல "அணி எவனோ என்று அலறியுள்ளான் அவன்.

இந்தக் குறளிலிருந்து, குறிப்பாகப் பெண்மணிகள் - அவருள்ளும் சிறப்பாகச் செல்வ மங்கையர் தெரிந்து கொள்ளவேண்டியதென்ன? ஆடவர்கள் அவர்தம் செல்வத்தின் அளவை அறிவிக்கும் விளம்பர வண்டியாகத் தங்களைப் பயன் படுத்திக்கொள்ள இடந்தரலாகாது. நாங்களென்ன அலங்காரப் பதுமைகளா? அல்லது சுமை தாங்கிகளா? என்று ஆடவரைக் கேட்கவேண்டும். ஆடவர் நகை வாங்கிப் போடாவிட்டால், போடும்படி அவர்களை வற்புறுத்துகின்ற மங்கையர்க்கு நமது இரக்கம் உரித்தாகுக!

பொருள் பால்
அரசியல் - இறைமாட்சி
பண்புடை வேந்தன்

(தெளிவுரை) காது கசக்கும்படித் தாங்கள் சொல்லுங் குறைகளைப் பொறுத்துக்கொண்டு ஆவன புரியும் உயர்ந்த பண்பாடுடைய அரசனது ஆட்சியில்தான் மக்கள் தங்குவர்.

"செவிகைப்புச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கு முலகு"